முகப்பு
செய்திகள்

முதன் முறையாக இணையும் விஷால்- சமந்தா!

புதுமுக இயக்குநர் மித்ரன் இயக்கும் படமொன்றில் நடிகர் விஷால் - நடிகை சமந்தா இணைந்து நடிக்க   உள்ள தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 8 அக்டோபர், 2016 at 12:04 PM
பகிர்:

சென்னை: புதுமுக இயக்குநர் மித்ரன் இயக்கும் படமொன்றில் நடிகர் விஷால் - நடிகை சமந்தா இணைந்து நடிக்க   உள்ள தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் 'துப்பறிவாளன்' என்ற படத்தில் விஷால் நடித்து வருகிறார் இந்த படம் முடிந்ததும், புதுமுக இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் நடிக்க விஷால் சம்மதம் தெரிவித்திருக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தான் நாயகனாக நடிப்பது மட்டுமன்றி தனது 'விஷால் பிலிம் பேக்டரி'  மூலம் இந்த படத்தை அவரே தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கியின்றன.

Advertisement

இந்த படத்தில் நாயகியாக சமந்தா நடிக்க உள்ளார்.இசையமைப்பாளராக யுவனிடம் படக்குகுவினர் பேச்சு நடத்தி வருகின்றனர். விஜயின் 'தேறி' படத்தில்பணியாற்றிய ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம்ஸ், எடிட்டர்  ரூபன் ஆகியோரே இந்த படத்திலும் பணியாற்ற உள்ளனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் துவங்கப்பட இருக்கிறது. இந்த படத்திற்கு அநேகமாக மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த 'இரும்பு திரை'  படத்தின் பெயரே வைக்கப்படலாம் என்று தெரியவருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.