முகப்பு
செய்திகள்

ரெமோ நன்றி விழாவில் தயாரிப்பாளருக்குப் புகழாரம்!

ரெமோ படம் பெரிய அளவில் வெற்றி பெற்றதையடுத்து, இதன் நன்றி விழா நேற்று நடைபெற்றது.

Updated On : 25 ஜனவரி, 2024 at 4:44 AM
பகிர்:

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரெமோ படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். ஆர்.டி. ராஜா தயாரித்துள்ள இப்படத்துக்கு ஒளிப்பதிவு - பி.சி. ஸ்ரீராம், இசை - அனிருத்.

ரெமோ படம் பெரிய அளவில் வெற்றி பெற்றதையடுத்து, இதன் நன்றி விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னணி விநியோகஸ்தரான திருப்பூர் சுப்ரமணியம் கூறும்போது: ரஜினி நடித்த சிவாஜி படத்துக்குப் பிறகு நான் விநியோகம் செய்வதில் அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை. ஆனால் ரெமோ படம் எனக்கு அளித்த உற்சாகமும், புத்துணர்வும் என்னை மீண்டும் விநியோகத் துறையில் ஈடுபட வைத்துள்ளது. பொதுவாகவே விநியோகஸ்தர் தான் ஒரு திரைப்படத்தை வாங்க தயாரிப்பாளரை நாடிச் செல்வர். ஆனால் தயாரிப்பாளர் ஆர்.டி. ராஜா எவ்வித ஈகோவும் இன்றி எங்களை வந்து சந்தித்தார். இந்தப் படத்தால் எல்லா விநியோகஸ்தர்களும் மகிழ்ச்சியாக உள்ளோம். ரெமோ படத்தின் வெற்றிக்கு முக்கிய தூண், அதன் தயாரிப்பாளர் ஆர்.டி. ராஜா என்று நான் உறுதியாகவே சொல்வேன்’ என்றார்.  

ரெமோ படத்தில் நடித்த கே.எஸ். ரவிக்குமார் கூறியதாவது: ஒரு திரைப்படத்திற்கு நன்றி விழா என்பதை நான் இப்போதுதான் முதல் முறையாகப் பார்க்கிறேன். சினிமா மீது அளவு கடந்த அன்பும், சினிமாவுக்காக தன்னையே அர்ப்பணித்துக்கொள்ளும் குணம் கொண்ட மனிதர்களால்தான்  இத்தகைய செயல்களைச் செய்யமுடியும். அப்படி நான் பார்த்த  தயாரிப்பாளர்களுள்  ஆர் பி சொளத்ரி, ஏ எம் ரத்னம் போன்ற சிலரை தான் நான் பார்த்துள்ளேன். அப்படி ஒரு தயாரிப்பாளராக தற்போது ராஜாவைப் பார்க்கிறேன் என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →