முகப்பு
செய்திகள்

விடுமுறை வசூலை மொத்தமாக அள்ளிய ‘ரெமோ’!

இதுவரை வெளிவந்த சிவகார்த்திகேயன் படங்களில் அதிக வசூல் செய்த படம்...

Updated On : 14 அக்டோபர், 2016 at 2:31 PM
பகிர்:

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரெமோ படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். ஆர்.டி. ராஜா தயாரித்துள்ள இப்படத்துக்கு ஒளிப்பதிவு - பி.சி. ஸ்ரீராம், இசை - அனிருத்.

கடந்த வெள்ளியன்று வெளியான ரெமோ, வசூலில் சாதனை நிகழ்த்தி வருகிறது. முதல் நாளிலேயே ரூ. 8 கோடி வரை வசூல் செய்தது. சிவகார்த்திகேயன் படங்களில் அதிக முதல்நாள் வசூல் கண்டது ரெமோதான்.

இப்போது விடுமுறை தினங்களின் வசூலாக ரூ. 50 கோடியை அள்ளியிருக்கிறது. இந்தப் படத்துக்குத் தமிழ்நாட்டில் ரூ. 37 கோடியும் வெளிநாட்டில் ரூ. 13 கோடியும் முதல் வாரத்தில் கிடைத்துள்ளது. இந்தத் தகவலை ரெமோ பட தயாரிப்பு நிறுவனமும் உறுதிப்படுத்தியுள்ளது. இதுவரை வெளிவந்த சிவகார்த்திகேயன் படங்களில் அதிக வசூல் செய்த படம் என்கிற பெருமையைப் பெற்றுள்ளது ரெமோ.

Advertisement

இதன் அடிப்படையில், 2016-ன் சூப்பர் ஹிட் படங்களான கபாலி, தெறி ஆகியவற்றுடன் ரெமோவும் இணைந்துகொண்டுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.