செய்திகள்

விஜய் சேதுபதியை முந்துவார் ஜி.வி. பிரகாஷ்: பிரபல இயக்குநர் கணிப்பு!

DIN

இந்தவருடம் சந்தேகமில்லாமல் விஜய் சேதுபதிதான் முன்னணியில் இருக்கிறார். அதிகப் படங்களில் நடித்த நடிகர்களின் பட்டியலில்!

அடுத்தவருடமும் அவர்தானா? இல்லை என்கிறார் இயக்குநர் பாண்டிராஜ். இந்தவருடம் எப்படி விஜய் சேதுபதி அதிகப் படங்களில் நடித்துள்ளாரோ அதுபோல அடுத்த வருடம் ஜி.வி. பிரகாஷ் நடித்த ஏராளமான படங்கள் வெளியாகும் என்கிறார்.

புரூஸ் லீ - ஜி.வி. பிரகாஷின் புதிய படம். பிரசாந்த் இயக்கத்தில் ஜி.வி, கீர்த்தி கர்பண்டா போன்றோர் நடித்துள்ளார்கள். இதன் பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குநர் பாண்டிராஜ் பேசியதாவது: என்னிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய பிரசாந்த் இந்தப் படத்தின் இயக்குநராகியிருப்பது சந்தோஷம். இப்போது ஜி.வி.பிரகாஷ் அதிகப் படங்களில் நடிக்கிறார். ஒவ்வொரு படத்திலும் தன்னை நன்கு நிரூபித்துவருகிறார். இந்த வருடம் விஜய் சேதுபதி அதிக படங்களில் நடித்துள்ளார். அடுத்தவருடம் அதிகப் படங்களில் நடித்து ஜி.வி. பிரகாஷ் முதலிடத்தில் இருப்பார் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

SCROLL FOR NEXT