செய்திகள்

தீபாவளிக்கு வெளியாகிறது சூர்யாவின் சிங்கம் - 3 'மோஷன் போஸ்டர்'!

DIN

சென்னை: ஹரியின் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகிவரும் சிங்கம்-3 படத்தின் மோஷன் போஸ்டரை வரும் தீபாவளி அன்று வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

ஹரியின் வெற்றி படமான  ‘சிங்கம்’ பட வரிசையில் மூன்றாவது பாகமாக சிங்கம்-3 (எஸ்-3) உருவாகி வருகிறது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இந்தப்படத்தில் ஸ்ருதிஹாசன், அனுஷ்கா ஷெட்டி, விவேக், சூரி, ராதிகா சரத்குமார், ராதாரவி, நாசர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்தது. வருகிற டிசம்பர் 16 அன்று படத்தை வெளியிட உள்ளதாக முன்னரே அறிவித்துள்ளனர். தற்பொழுது இப்படத்தின் டீசரை வெளியிடுவதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் டீசர் வெளிவரும் தேதியை ஒரு மோஷன் போஸ்டர் மூலமாக வெளியிடவுள்ளனர். அந்த போஸ்டரானது தீபாவளிக்கு வெளியிடப்படும் என்று படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். தீபாவளிக்கு இது சூர்யாவின் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

SCROLL FOR NEXT