செய்திகள்

நீதிமன்றத்தை நாடுவேன்: நடிகர் சரத்குமார் விளக்கம்

DIN

நடிகர் சங்கத்தில் இருந்து சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் ஆகியோர் உறுப்பினர் பதவியிலிருந்து தாற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்கள். இதுகுறித்து நடிகர் சரத்குமார் பதில் அளித்துள்ளார்கள். 

இந்த விவகாரம் குறித்து நடிகர் சங்கம் அறிக்கையில் கூறப்பட்டதாவது: முந்தைய நிர்வாகம் செய்த முறைகேடுகள் பல ஆவணங்கள் மற்றும் விவரங்கள் மூலமாக தெரிய வந்துள்ளது. இது பற்றி பலமுறை செயற்குழுவில் விவாதித்து பல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும் கடந்த ஆண்டு பொதுக்குழுவில் நடவடிக்கைகள் எடுக்க ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அதன்படி சட்டப்படி பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சங்க விதிமுறைகளின்படியும் இப்போது நடவடிக்கை எடுத்திருக்கிறோம். அதன்படி இந்த முறைகேடுகளின் விசாரணை முடிந்து உண்மை தெரியும் வரை முன்னாள் நிர்வாகிகளான சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் ஆகியோர் தாற்காலிகமாக நடிகர் சங்க உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இது பழிவாங்கும் நடவடிக்கை அல்ல என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

நடிகர் சங்கத்தின் இந்த நடவடிக்கை குறித்து நடிகை ராதிகா சரத்குமார் ட்விட்டரில் கூறியதாவது: நடிகர் சங்கத்தில் பழிவாங்கும் படலம் தொடங்கிவிட்டது. 100 கோடி மோசடி என்று குற்றச்சாட்டை ஆரம்பித்தார் விஷால். அதற்குரிய விளக்கம் தரப்படவில்லை. ஆனால் உறுப்பினர் பதவியைப் பறித்துள்ளார்கள். நடிகர் சங்கத்தில் அனுபவம் உள்ளவர்கள் தேவைப்படுகிறார்கள். ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகள்...! இதன் முடிவு என்ன? கசப்பணுவத்தை அழிக்கமுடியுமா? கருத்துவேறுபாடுகள் தோன்றியபோது விளக்கமளிக்க உங்களுக்குச் சந்தர்ப்பம் அளிக்கப்பட்டது. நீங்களும் மன்னிப்பு கோரினீர்கள். விஷால், உங்களுக்குள் அளவுக்கு அதிகமான வெறுப்புணர்வை வளர்த்துக்கொண்டுள்ளீர்கள் என்றார்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து சரத்குமார் பதிலளித்துள்ளார். நடிகர் சங்க உறுப்பினர் பதவியிலிருந்து தன்னைத் தாற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ பதில் எதுவும் வரவில்லை. ஊடகங்கள் வாயிலாகவே தகவல் அறிந்தேன். கடிதம் வந்தால் நீதிமன்றத்தை நாடுவேன் என்று சரத் குமார் கூறியுள்ளார்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெண் தாமரை... கண்மணி!

"அனுமதி பெற்றே பாடலை பயன்படுத்தினோம்": மஞ்ஞுமல் பாய்ஸ் தயாரிப்பாளர்

புணே சொகுசு கார் விபத்தில் ஓட்டுநரை சரணடைய வைக்க முயற்சி: காவல்துறை

அன்பே வா தொடர் நாயகியின் புதிய பட அறிவிப்பு!

முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணையா? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

SCROLL FOR NEXT