ஏ.ஆர். ரஹ்மானைத் தமிழில் வரவேற்ற ஜப்பான் மாணவி!
ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஜப்பான் நாட்டின் ஃபுகுவோகா விருது சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஜப்பான் நாட்டின் யோகோபோடியா அமைப்பால் வழங்கப்படும், ஃபுகுவோகா விருது சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இசைத்துறையில் சிறந்து விளங்குவதற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது.
இந்த விருதைப் பெறுவதற்காக ஃபுகுவோகாவுக்குச் சென்றார் ரஹ்மான். அங்கு இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் அவரை வரவேற்றார்கள். ஒரு மாணவி தமிழில் எழுதப்பட்ட பலகை கொண்டு அவரை வரவேற்றார்.
ரஹ்மான் அவர்களே வருக வருக, எல்லாப் புகழும் இறைவனுக்கே என்கிற வாசகங்களை உடைய அட்டைகளைக் கொண்டு ரஹ்மானை வரவேற்றார். இதன் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார் ரஹ்மான்!