முகப்பு
செய்திகள்

மோகன்லால் நடிக்கும் படத்தை இயக்குகிறார் நடிகர் பிருத்விராஜ்!

மொழி உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்த மலையாள நடிகர் பிருத்விராஜ் இயக்குநராக மாறியுள்ளார்.

Updated On : 25 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

மொழி உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்த மலையாள நடிகர் பிருத்விராஜ் இயக்குநராக மாறியுள்ளார்.

மோகன்லால் கதாநாயகனாக நடிக்கும் லுசிஃபர் என்கிற மலையாளப் படத்தை இயக்க உள்ளதாக அவர் அறிவித்துள்ளார். 

மோகன்லால் மற்றும் பிருத்விராஜ் ஆகியோரின் படங்கள், சமீபத்தில் ஒரே நாளில் வெளியாகின. இதனால் இரு நடிகர்களின் ரசிகர்களும் சமூகவலைத்தளங்களில் மோதல்களில் ஈடுபட்டார்கள். இதுபோன்ற செயல்களில் ஈடுபடவேண்டாம் என்று ஃபேஸ்புக்கில் பதிவு எழுதினார் பிருத்விராஜ். இதனையடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.