முகப்பு
செய்திகள்

சாவித்திரி படம்: சூர்யா நடிக்கவில்லை

நாக் அஸ்வின், சாவித்திரி வாழ்க்கையைத் திரைப்படமாக இயக்குகிறார்.

Updated On : 1 ஏப்ரல், 2017 at 5:51 PM
பகிர்:

60 - 70-ஆம் ஆண்டு கால கட்டங்களில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்கியவர் சாவித்திரி. இப்போதைய கால கட்டத்திலும் சாவித்திரி போல் நடிக்க விரும்புவதாகவும், அவர்தான் ரோல் மாடல் என்று கூறும் நடிகைகளைப் பார்க்க முடியும். அந்தளவுக்கு தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்து மறைந்தவர் சாவித்திரி.

அதே போல் சாவித்திரியின் தனிப்பட்ட வாழ்க்கை பல்வேறு ஏற்றத் தாழ்வுகள் நிறைந்தது. துரோகம், ஏமாற்றம், வறுமை என பல மாற்றங்கள் அவரது வாழ்க்கையில் உண்டு. இவரது வாழ்க்கை சினிமா கதைக்கான சுவாரஸ்யங்கள் நிறைந்தது என்பதால், அதை சினிமாவாக எடுப்பதற்கு பல்வேறு முயற்சிகள் நடந்து வருகின்றன. 

இயக்குநர் நாக் அஸ்வின், சாவித்திரி வாழ்க்கையைத் திரைப்படமாக இயக்குகிறார். மகாநதி என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் சாவித்திரி கதாபாத்திரத்தில் நடிக்க தேர்வாகியிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். சாவித்திரியின் வாழ்க்கையை விவரிக்கும் கதாபாத்திரத்தை சமந்தா ஏற்றுள்ளார்.

Advertisement

இப்படத்தில் ஜெமினி கணேசன் வேடத்தில் சூர்யா நடிப்பதாகப் பேச்சு எழுந்தது. ஆனால் இத்தகவலைப் படக்குழு மறுத்துள்ளது. முதலில் ஜெமினி கணேசன் வேடத்துக்கு சூர்யா பரிசீலிக்கப்பட்டார். ஆனால் அது சாத்தியமாகவில்லை. எனவே வேறொரு நடிகர் அந்த வேடத்தில் நடிப்பார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.