செய்திகள்

வரிவிலக்கு நெருக்கடி? ப.பாண்டி ஆனது பவர் பாண்டி!

இன்று தனது ட்விட்டர் தளத்திலும் ப.பாண்டி என்று குறிப்பிட்டு படத்தின் விளம்பரத்தை வெளியிட்டுள்ளார் தனுஷ்.

எழில்

மார்ச் 31-ம் தேதி வரை பவர் பாண்டி என்றுதான் படத்தை தனது ட்விட்டர் தளத்தில் விளம்பரம் செய்துவந்தார் தனுஷ். ஏப்ரல் 1 அன்று வெளியிட்ட புதிய ட்ரெய்லரில் படத்தின் தலைப்பு ப.பாண்டி என மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

ஆனாலும் அதே யூடியூப் டிரெய்லரின் குறிப்பில் படத்தின் பெயராக பவர் பாண்டி என்றே ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. ட்விட்டர் தளத்தில் தனுஷ் அதை விளம்பரப்படுத்தும்போதும் பவர் பாண்டி என்றே குறிப்பிட்டார். வரிவிலக்குக்காக பவர் பாண்டி, ப. பாண்டி என மாற்றம் செய்யப்பட்டதாக அறியப்படுகிறது. 

ராஜ்கிரண் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் ரேவதி, பிரசன்னா, சாயா சிங், செண்ட்ராயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம், ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் கதைக்களம், அதிரடி சண்டைக் காட்சி கலைஞர் ஒருவரைப் பற்றிய கதையாகும். 

இந்நிலையில் ஆனால் இன்று தனது ட்விட்டர் தளத்திலும் ப.பாண்டி என்று குறிப்பிட்டு படத்தின் விளம்பரத்தை வெளியிட்டுள்ளார் தனுஷ். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் மறியல்: 50 போ் கைது

தேஜஸ் போா் விமானங்களின் பயன்பாடு தற்காலிக நிறுத்தம்

தனியாா் வசம் குடிநீா் விநியோகம்: அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பை ஏற்க முடியாது -ஐரோப்பிய யூனியன் திட்டவட்டம்

காலமுறை ஊதியம் வழங்கக் கோரி வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் மறியல்

SCROLL FOR NEXT