முகப்பு
செய்திகள்

ஹிந்திப் படத்தில் நடிக்கிறேனா? விஜய் சேதுபதி மறுப்பு!

தமிழில் தொடர்ந்து கவனம் ஈர்க்கும் படங்கள் மூலமாக அசத்தி வரும் விஜய் சேதுபதி அடுத்ததாக...

Updated On : 7 ஏப்ரல், 2017 at 10:45 AM
பகிர்:

தமிழில் தொடர்ந்து கவனம் ஈர்க்கும் படங்கள் மூலமாக அசத்தி வரும் விஜய் சேதுபதி அடுத்ததாக ஹிந்திப் படத்தில் நடிக்கவுள்ளார் எனச் செய்திகள் வெளியாகின. இயக்குநர் அனுராக் காஷ்யப்பிடம் பணியாற்றிய வாசன் பாலா இயக்கும் Mard Ko Dard Nahin Hota என்கிற ஹிந்திப் படத்தில் கதாநாயகனாக விஹய் சேதுபதி நடிக்கவுள்ளார் என்று வெளியான செய்திகள் ஆச்சர்யத்தை ஏற்படுத்தினர்.

ஆனால் இச்செய்தியை விஜய் சேதுபதி மறுத்துள்ளார். எங்கிருந்து இதுபோன்ற செய்திகள் உருவாகின்றன எனத் தெரியவில்லை. ஹிந்திப் படத்தில் நடிக்கவெல்லாம் இல்லை. நான் எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திவிடவில்லை என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.