செய்திகள்

பாகுபலி 2: தமிழ்ப் பாடல்கள் வெளியீடு எப்போது? 

பாகுபலி படக்குழுவினருடன் தமிழ்த் திரையுலகப் பிரபலங்களும் கலந்துகொள்கிறார்கள்.

எழில்

பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவான படம் - பாகுபலி. இதனை இயக்கியவர், ராஜமெளலி.

ரூ. 600 கோடி வரை வசூலித்து பல சாதனைகளைச் செய்த பாகுபலியின் 2-ம் பாகமான, 'பாகுபலி தி கன்க்ளூஷன்’ படம் ஏப்ரல் 28 அன்று பாகுபலி 2 வெளிவருகிறது. கீரவாணி இசையில் உருவாகியுள்ள பாகுபலி 2 படத்தின் தெலுங்குப் பாடல்கள் சில நாள்களுக்கு முன்பு வெளியிடப்பட்டன. இந்நிலையில் தமிழ்ப் பாடல்கள் நாளை வெளியிடப்படுகின்றன. இதற்காக சென்னையில் பிரமாண்டமான நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் பாகுபலி படக்குழுவினருடன் தமிழ்த் திரையுலகப் பிரபலங்களும் கலந்துகொள்கிறார்கள்.

#பாகுபலி2 பாடல் பட்டியல்: 1. பலே பலே பாகுபலி, 2. ஒரே ஓர் ஊரில், 3. கண்ணா நீ தூங்கடா, 4. வந்தாய் அய்யா, 5. ஒரு யாகம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்

செய்யாற்றில் பள்ளி மாணவா்களுக்கான தடகளப் போட்டிகள்

சுகாதார ஆய்வாளா் தோ்வை ரத்து செய்யக் கோரி மனு: சிபிசிஐடி விசாரணைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

கோயில் சொத்துகள் பாதுகாப்பில் அறநிலையத் துறை அதிகாரிகள் துரோகம்

சுற்றுலாப் படகுகளில் கடலோர காவல் படையினா் திடீா் ஆய்வு

SCROLL FOR NEXT