செய்திகள்

சுந்தர் சியின் மெகா பட்ஜெட் 'சங்கமித்ரா':  ஜுலை மூன்றாம் தேதி படப்பிடிப்பு துவக்கம்?

இயக்குனர் சுந்தர் சியின் 150 கோடி மெகா பட்ஜெட் படமான சங்கமித்ராவின் படப்பிடிப்பு வரும் ஜுலை மூன்றாம் தேதி முதல் துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

IANS

சென்னை; இயக்குனர் சுந்தர் சியின் 150 கோடி மெகா பட்ஜெட் படமான சங்கமித்ராவின் படப்பிடிப்பு வரும் ஜுலை மூன்றாம் தேதி முதல் துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில், சுந்தர் சியின் இயக்கத்தில் உருவாகவுள்ள வரலாற்று படம்தான் சங்கமித்ரா.தமிழ் தவிர ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் இப்படம் தயாரிக்கபப்ட்ட உள்ளது.

இந்த படத்தில் ஜெயம் ரவி, ஆர்யா மற்றும் ஸ்ருதி ஹாசன் ஆகியோர் நடிக்க உள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜுலை மூன்றாம் தேதி முதல் துவங்க உள்ளதாக தற்பொழுது தகவல்கள் வெளியாகியுள்ளது.இது தொடர்பாக அந்த படக்குழுவினைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்ததாவது:

படத்திற்கான ப்ரீ ப்ரொடக்ஷன் என்னும் முன் தயாரிப்பு வேலைகள் கடந்த மூன்று மாதங்களாக நடந்து வந்தன அத்துடன் நடிக நடிகையருக்கு வாள் வீச்சு மற்றும் குதிரையேற்றம் உள்ளிட்ட  பயிற்சிகளும் வழங்கப்பட்டு வந்தன. தற்பொழுது வரும் ஜுலை மூன்றாம் தேதி முதல் படப்பிடிப்பு துவங்கலாம் என்று தயாரிப்பு தரப்பு முடிவெடுத்துள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதனிடையே நடிகை ஸ்ருதி சில நாட்களுக்கு முன்னதாக தனது டிவிட்டர் பக்கத்தில் சங்கமித்ரா படத்தில் ஏற்றுள்ள கதாபாத்திரத்திற்காக விசேஷ சண்டை பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், 'எனது திரையுலக வாழக்கையில் எனக்கு கிடைத்துளள பெரிய கதாபாத்திரம் இது; இதன் மூலம் இதற்கு முன் முயற்சித்து பார்த்திராத ஒன்றை செய்து பார்க்கும் ஒரு வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது' என்றுகருத்து தெரிவித்திருந்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் மறுப்பு!

முதலாமாண்டு பொறியியல் வகுப்புகள் ஆக. 11-ல் தொடக்கம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு!

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

SCROLL FOR NEXT