செய்திகள்

பாகுபலி 2 ஹிந்திப் படத்தின் வெளிநாட்டு விநியோகஸ்தர்!

எங்கள் மீது நம்பிக்கை வைத்த படக்குழுவுக்கு நன்றி என அந்நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

எழில்

பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவான படம் - பாகுபலி. இதனை இயக்கியவர், ராஜமெளலி.

ரூ. 600 கோடி வரை வசூலித்து பல சாதனைகளைச் செய்த பாகுபலியின் 2-ம் பாகமான, 'பாகுபலி தி கன்க்ளூஷன்’ படம் ஏப்ரல் 28 அன்று பாகுபலி 2 வெளிவருகிறது. கீரவாணி இசையில் உருவாகியுள்ள பாகுபலி 2 படத்தின் தமிழ்ப் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன.

இந்நிலையில், அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் Cinestaan AA என்கிற நிறுவனம் பாகுபலி 2 ஹிந்திப் பதிப்பின் விநியோக உரிமையைப் பெற்றுள்ளது.

இந்த வாய்ப்பு கிடைத்தது மிக்க மகிழ்ச்சி. எங்கள் மீது நம்பிக்கை வைத்த படக்குழுவுக்கு நன்றி என அந்நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அறிவுக் கருவூலத்தின் திறவுகோல்!

காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாள்

காஞ்சிபுரத்தில் மாா்ச் 2-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

ஆரணி சிபிஎஸ்இ பள்ளியில் கல்வி கண்காட்சி விழா

SCROLL FOR NEXT