என்ன ஒரு பயணம், என்ன ஓர் அனுபவம்! இயக்குநர் ராஜமெளலி உருக்கம்
படத்தின் ஒட்டுமொத்த பணிகளும் இன்று நிறைவடைகின்றன. இதுகுறித்து இயக்குநர் ராஜமெளலி ட்விட்டரில் உருக்கமாக
பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவான படம் - பாகுபலி. இதனை இயக்கியவர், ராஜமெளலி. ரூ. 600 கோடி வரை வசூலித்து பல சாதனைகளைச் செய்த பாகுபலியின் 2-ம் பாகமான, 'பாகுபலி தி கன்க்ளூஷன்’ படம் ஏப்ரல் 28 அன்று பாகுபலி 2 வெளிவருகிறது.
இந்நிலையில் படத்தின் ஒட்டுமொத்த பணிகளும் இன்று நிறைவடைகின்றன. இதுகுறித்து இயக்குநர் ராஜமெளலி ட்விட்டரில் உருக்கமாகக் கூறியதாவது:
கடைசி வேலை நாள். நம்பிக்கையாக.
Advertisement
என்ன ஒரு பயணம், என்ன ஓர் அனுபவம்!
சந்தோஷத்தில் புன்னகைக்கிறேன், வலியால் துடிக்கிறேன் என்று எழுதியுள்ளார்.