முகப்பு
செய்திகள்

பாகுபலி 1 மீண்டும் வெளியீடு! ஒரு வாரத்துக்கு மட்டும்!

பாகுபலி 1 தமிழில் மீண்டும் வெளியிடப்படவுள்ளது.

Updated On : 19 ஏப்ரல், 2017 at 2:24 PM
பகிர்:

பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவான படம் - பாகுபலி. இதனை இயக்கியவர், ராஜமெளலி. 

ரூ. 600 கோடி வரை வசூலித்து பல சாதனைகளைச் செய்த பாகுபலியின் 2-ம் பாகமான, 'பாகுபலி தி கன்க்ளூஷன்’ படம் ஏப்ரல் 28 அன்று பாகுபலி 2 வெளிவருகிறது. கீரவாணி இசையில் உருவாகியுள்ள பாகுபலி 2 படத்தின் தமிழ்ப் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன.

இந்நிலையில் பாகுபலி 1 தமிழில் மீண்டும் வெளியிடப்படவுள்ளது. ஏப்ரல் 21 அன்று குறிப்பிட்ட சில திரையரங்குகளில் மட்டும் ஒரு வாரத்துக்கு மட்டும் வெளியிடப்படுகிறது. சென்னையில் அபிராமி நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.