முகப்பு
செய்திகள்

தள்ளிப்போகிறது ரஜினிகாந்தின் '2.0' ரிலீஸ் தேதி!

ரஜினி ரசிகர்கள் அனைவரும் ஆவலுடம் எதிர்பாத்துக் கொண்டிருக்கும் அவரது '2.0' படம் வரும் தீபாவளி அன்று  ரிலீஸ் ஆகாது என்று அந்த படக்குழு தெரிவித்துள்ளது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:21 PM
பகிர்:

சென்னை: ரஜினி ரசிகர்கள் அனைவரும் ஆவலுடம் எதிர்பாத்துக் கொண்டிருக்கும் அவரது '2.0' படம் வரும் தீபாவளி அன்று  ரிலீஸ் ஆகாது என்று அந்த படக்குழு தெரிவித்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், பிரபல இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் '2.0'.  மிகுந்த பொரு ட் செலவில் தயாரிக்கப்படும் இந்தப் படமானது வரும் தீபாவளி தினத்தன்று வெளியாகும் என்றுமுதலில் அறிவிக்கபட்டிருந்தது.

இந்நிலையில் அப்படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் '2.0' திரைப்படம் முன்பே அறிவித்துருந்தபடி வரும் தீபாவளி தினத்தன்று வெளியாகாது. படத்திற்கான கிராபிக்ஸ் வேலைகளை முடிக்க இன்னும் அதிக அளவு நேரம் தேவைபடுவதால்  இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

'2.0' திரைப்படமானது 2018-ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி அன்று வெளியாகும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →