வினோத் கண்ணா மறைவு: ரஜினி இரங்கல்!
வினோத் கண்ணாவின் குடும்பத்துக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்...
பழம்பெரும் பாலிவுட் நடிகர் வினோத் கண்ணா மும்பையில் இன்று மரணம் அடைந்துள்ளார். அவருக்கு வயது 70. சமீபகாலமாக வினோத் கண்ணா புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தாகக் கூறப்படுகிறது. இதனால் அவருக்கு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். வினோத் கண்ணாவின் மறைவுக்கு பாலிவுட் நட்சத்திரங்கள் சமூகவலைத்தளங்கள் வழியாக இரங்கல் தெரிவித்துவருகிறார்கள்.
ரஜினி, ட்விட்டர் வழியாக இரங்கலைத் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: வினோத் கண்ணா, உங்களை இழந்து வாடுகிறேன். வினோத் கண்ணாவின் குடும்பத்துக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல் என்று கூறியுள்ளார்.