நடிகை ராதிகா நடித்த கோகோ கோலா விளம்பரம் குறித்த கிண்டலான வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியானது. இது சமூகவலைத்தளங்களில் பலராலும் பகிரப்பட்டது. கோகோ கோலா விளம்பரம் பலவருடங்களுக்கு முன்பு வெளியானது என்றாலும் அது குறித்த விமரிசனங்களுக்கு ட்விட்டர் வழியாகப் பதில் அளித்துள்ளார் ராதிகா.
அவர் கூறியதாவது:
உங்கள் உணர்வுகளைப் புரிந்துகொள்கிறேன். ஆனால் நான் 2005-ல் நடித்த விளம்பரம் அது. ஹிந்தியில் ஆமீர் கான் நடித்தார். அதைப் பற்றி இப்போது பேசுவது உங்களுடைய மனச்சிக்கலையே வெளிப்படுத்துகிறது என்று சாடியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.