செய்திகள்

பாகுபலி 2: தமிழ்நாட்டின் முதல் நாள் வசூல்!

முதல் நாளன்று ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ள பாகுபலி 2, தமிழ்நாட்டில் மட்டும்...

எழில்

பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள படம் - 'பாகுபலி தி கன்க்ளூஷன்’ (பாகுபலி 2). இந்தப் படம், நேற்று வெளியாகியுள்ளது. 

உலகம் முழுக்க இருந்து இந்தப் படத்துக்கு விமரிசனங்கள் குவிந்துவருகின்றன. கிட்டத்தட்ட அனைவரும் படத்தை ஆஹோஓஹோ எனப் பாராட்டுகிறார்கள். இந்திய சினிமாவின் மகத்தான படம் என்பதே பலருடைய கருத்தாக உள்ளது.

முதல் நாளன்று ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ள பாகுபலி 2, தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 11 கோடியை அள்ளியுள்ளது. இத்தனைக்கும் பல இடங்களில் அதிகாலைக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. தணிக்கையில் யு/ஏ கிடைத்துள்ளதால் இந்தப் படத்துக்கு வரிச்சலுகை கிடையாது. சென்னையில் மூன்று மொழிகளிலும் சேர்த்து கிட்டத்தட்ட ரூ. 91 லட்சம் வசூல் கிடைத்துள்ளது. இதில் தமிழ் - ரூ. 76 லட்சம், தெலுங்கு ரூ. 14 லட்சம், ஹிந்தி - 1 லட்சம்)  சமீபத்தில் வெளியான கபாலி, தெறி, பைரவா ஆகிய படங்களுக்குப் பிறகு சென்னையில் முதல் நாளன்று அதிக வசூலை அள்ளிய படம் என்கிற பெருமையும் கிடைத்துள்ளது.

அடுத்த மூன்று நாள்களும் விடுமுறை தினம் என்பதால் தமிழ்நாட்டில் முதல் நான்கு நாள்களில் குறைந்தபட்சம் ரூ. 40 கோடி வசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நமக்கான வாகனம் நம்மருகே வந்துவிட்டது: ராமதாஸ்

இஸ்ரேல் புறப்பட்டார் பிரதமர் மோடி!

வைரலில் மிரட்டும் அனிருத்தின் பின்னணி இசைகள்!

மதுரையில் தடையில்லா குடிநீர் வழங்கப்படுவதாக பொய்யான தகவல்: முதல்வருக்கு செல்லூர் ராஜு கோரிக்கை

தவறான திட்டமிடலால் தடம்புரளும் ரயில் பயணிகள் நிலை! என்னதான் பிரச்னை?

SCROLL FOR NEXT