செய்திகள்

ஃபெப்சி வேலைநிறுத்தம் வாபஸ்: செல்வமணி அறிவிப்பு

எழில்

சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஃபெப்சி தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். ரஜினியின் காலா, விஜயின் மெர்சல், விஜய் ஆண்டனியின் அண்ணாதுரை, சசிகுமாரின் கொடி வீரன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களின் படப்பிடிப்புகள் இரண்டாம் நாளாக நேற்றும் ரத்து செய்யப்பட்டன. வெளி மாவட்டங்களில் நடந்து வந்து படப்பிடிப்புப் பணிகளும் பாதிப்படைந்தன. சுமார் 95 சதவீத படப்பிடிப்பு மற்றும் படப் பணிகள் இதனால் பாதிக்கப்பட்டன.

இந்நிலையில் இந்தப் பிரச்னையில் சமரசம் ஏற்படுத்தும் ரஜினி, கமல் உள்ளிட்ட மூத்த நடிகர்களின் துணையை அணுகியது ஃபெப்சி அமைப்பு. இது தொடர்பாக ஃபெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி, செயலாளர் அங்கமுத்து உள்ளிட்ட நிர்வாகிகள் நடிகர் ரஜினிகாந்தை புதன்கிழமை சந்தித்துப் பேசினர்.

இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டார். அதில் கூறியதாவது: எனக்குப் பிடிக்காத வார்த்தைகளில் வேலைநிறுத்தம் என்கிறது ஒன்று. எந்தப் பிரச்னையாக இருந்தாலும் சுய கௌரவம் பார்க்காமல், பொது நலத்தை மட்டுமே கருதி அன்பான வார்த்தைகளிலேயே பேசி தீர்வு காணலாம். தயாரிப்பாளர் சங்கமும் ஃபெப்சி சம்மேளனமும் கலந்து பேசி கூடிய சீக்கிரம் சுமுகமான தீர்வு காண வேண்டும் என்று மூத்த கலைஞன் என்ற முறையில் அன்பான வேண்டுகோள் வைக்கிறேன் என்றார்.

10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையை இழந்துள்ளனர். இது எங்களுக்குப் பெரிய பாதிப்பு. வேலை நிறுத்தம் தொடரக் கூடாது என்பதுதான் எங்களின் நிலை என்று நேற்று பேட்டியளித்த ஃபெப்சி அமைப்பின் தலைவர் செல்வமணி, வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதாக இன்று அறிவித்தார். ரஜினி உள்ளிட்டோர் கேட்டுக்கொண்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நாளை முதல் பெஃப்சி தொழிலாளர்கள் படப்பிடிப்புகளுக்குச் செல்வார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

வெப்ப அலை: அரியலூருக்கு ஆரஞ்சு; 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

வடலூரில் பழங்கால கட்டடங்கள்? தொல்லியல் துறை ஆய்வு

3-ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT