முகப்பு
செய்திகள்

என்னது, அடுத்த படத்தில் ஜேம்ஸ் பாண்டுக்கு கல்யாணமா? 

புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் டேனியல் கிரைக் மேலும் இரண்டு படங்களில் ஜேம்ஸ் பாண்டாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

Updated On : 7 ஆகஸ்ட், 2017 at 2:45 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 10:06 PM

லாஸ் ஏஞ்சலீஸ்: புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் டேனியல் கிரைக் மேலும் இரண்டு படங்களில் ஜேம்ஸ் பாண்டாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஹாலிவுட்டின் புகழ்பெற்ற  நடிகர் டேனியல் கிரைக். இவர் 2006-ஆம் ஆண்டு வெளியான 'கேசினோ  ராயல்' படத்தில் தொடங்கி, 2015-ஆம் ஆண்டு கடைசியாக வெளியான 'ஸ்பெக்ட்டர்' வரை இதுவரை 4 படங்களில் ஜேம்ஸ் பாண்டாக நடித்துள்ளார். இதற்குப் பிறகு அவர் இனிமேல் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடிக்க விரும்பவில்லை என்று முதலில் தகவல்கள் வெளிவந்தன.

ஆனால் தற்பொழுது அடுத்தடுத்து வெளியாகவுள்ள இரண்டு ஜேம்ஸபாண்ட் படங்களில் டேனியல் கிரைக் நடிக்க உள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.  அவ்வளவாக விருப்பம் இல்லாமல் இருந்த அவரை, படத்தின் தயாரிப்பாளர் பார்பரா பேசி சம்மதிக்க வைத்ததாக இங்கிலாந்து பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

Advertisement

இது தொடர்பாக தயாரிப்பு தரப்புக்கு நெருங்கிய வட்டாரத்திலிருந்து வெளியாகியுள்ள தகவல்கள் வருமாறு:

ஜேம்ஸ் பாண்டாக டேனியல் க்ரைகின் நடிப்பு உலகமெங்கும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அத்துடன் அவரது நடிப்பில் வெளியான படங்கள் நல்ல வசூலையும் பெற்றுள்ளன. எனவே அவரை இழக்க தயாரிப்பு தரப்பு விரும்பவிலை.

ஜேம்ஸ் பாண்ட் பட வரிசையில் 25-ஆவது படத்திற்கு தற்போதைக்கு 'ஷேட்டர் ஹாண்ட்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தினை அநேகமாக 2019-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடலாம் என்று திட்டமிட்டுள்ளார்கள்.

அதற்கு அடுத்தபடியாக டேனியல் கிரைக்கின் நடிப்பில் ஆறாவது ஜேம்ஸ் பாண்ட் படத்திற்கும் திட்டமிடபட்டுள்ளது. 1969-ஆம் ஆண்டு வெளியான ஜேம்ஸ் பாண்ட் படமான 'ஆன் ஹேர் மெஜஸ்ட்டிஸ் சீக்ரெட் சர்வீஸ்' படத்தினை இதற்காக ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளார்கள்.

இதில் ஜேம்ஸ் பாண்டுக்கு திருமணம் நடப்பது போலவும், எதிரிகளால் அவரது மனைவி கொல்லப்படுவது போலவும் கதை அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தயாரிப்பு வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.