செய்திகள்

வேலையில்லா பட்டதாரி 2 வெளியீடு: புதிய தகவல்கள்!

இதுவரை ஹைதராபாத், டெல்லி, மும்பை, மலேசியா என பல்வேறு பகுதிகளுக்கும் சென்று ரசிகர்களைச் சந்தித்தார்கள்..

எழில்

தாணு மற்றும் தனுஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள வேலையில்லா பட்டதாரி 2 படத்தை செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார். தனுஷ், அமலா பால், கஜோல் போன்றோர் நடித்துள்ளார்கள். இந்தப் படம் ஜூலை 28-ம் தேதி வெளிவருவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. பிறகு இப்படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் வருகிற ஆகஸ்ட் 11 அன்று வெளிவரும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலையில்லா பட்டதாரி 2 படம் 2 மணி நேரம் 9 நிமிடம் ஓடக்கூடியது. தமிழில் ஆகஸ்ட் 11 அன்று வெளியாகும் இந்தப் படம் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ஆகஸ்ட் 18 அன்று வெளியாகிறது. தமிழில் வெளியாகும் படத்துக்கு நாளை முதல் முன்பதிவு தொடங்குகிறது.

தனுஷ், கஜோல், செளந்தர்யா ஆகிய மூவரும் வேலையில்லா பட்டதாரி 2 படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்கள். இதுவரை ஹைதராபாத், டெல்லி, மும்பை, மலேசியா என பல்வேறு பகுதிகளுக்கும் சென்று ரசிகர்களைச் சந்தித்தார்கள். இதனிடையே தனுஷ், ஆண்டிபட்டி முத்துரெங்காபுரத்தில் உள்ள தனது குல தெய்வத்தின் கோயிலான கஸ்தூரி அங்கம்மாள் கோயிலில் வழிபாடு செய்ய தனது தாய், தந்தை மற்றும் மனைவி ஐஸ்வர்யா ஆகியோருடன் கடந்த வாரம் சென்றார். போடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வறட்சியால் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகள் குடும்பங்களுக்கு நல உதவிகளை அவர் வழங்கினார்.

இந்நிலையில் வேலையில்லா பட்டதாரி 2 படம் தொடர்பான விளம்பரப் பணிகளில் மீண்டும் இறங்கியுள்ளார் தனுஷ். நாளை கொச்சியில் நடைபெறுகிற நிகழ்ச்சியில் தனுஷ் மற்றும் படக்குழுவினர் கலந்துகொள்கிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மணிரத்னம் படத்தில் நாயகனாகும் துருவ் விக்ரம்!

ரொனால்டோவின் நம்பிக்கை... வெற்றி ரகசியம் பகிர்ந்த சிராஜ்!

பாகிஸ்தான் பருமழைக்கு 302 பேர் பலி, 727 பேர் காயம்!

பாஜக கூட்டணி எம். பி. க்கள் கூட்டத்தில் பிரதமரை வாழ்த்தி ஹர ஹர மகாதேவ் கோஷம்!

ஆக. 14 ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்!

SCROLL FOR NEXT