செய்திகள்

தமிழ்ப் பெண்களுக்குக் கிடைத்துள்ள சுதந்தரத்தால் ஆண்களுக்குச் சிக்கல்: இயக்குநர் ராம்

எழில்

தங்க மீன்கள் படத்துக்கு பிறகு ராம் இயக்கியுள்ள படம் - தரமணி. வசந்த் ரவி, ஆண்ட்ரியா, அஞ்சலி, அழகம் பெருமாள் போன்றோர் நடித்துள்ள இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

தணிக்கையில் ஏ சான்றிதழ் பெற்றுள்ள இந்தப் படம் ஆகஸ்ட் 11 அன்று வெளிவருகிறது. இதையொட்டி இப்படம் குறித்த விளம்பரங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. விளம்பர வாசகங்கள் சுவாரசியமாக மட்டுமல்லாமல் சர்ச்சைக்குரியதாகவும் உள்ளன.

இந்நிலையில் இப்படம் குறித்து இயக்குநர் ராம் கூறியதாவது: 

நான் அடுக்ககத்தில் வசிக்கிறேன். அங்குக் கண்ட சம்பவங்களைக் கொண்டு தரமணி படத்தை உருவாக்கியுள்ளேன். இன்றைய இளைஞர்களிடைய நிலவும் கலாசாரம், அவர்களுடைய மனநிலை, அவர்களின் உறவு என பல அம்சங்கள் படத்தில் உள்ளன. 

உலகமயமாக்கலினால் இன்றைய தமிழ்ப் பெண்களுக்கு நிறைய சுதந்தரம் கிடைத்துள்ளது. இதனால் நம் ஆண்கள் தங்களுடைய துணையைப் புரிந்துகொள்வதில் நவீனம் மற்றும் பழமையான சிந்தனைகளுக்கு மத்தியில் சிக்கியுள்ளார்கள். தரமணி படம் தகவல் கணிப்பொறித் துறையில் பணிபுரிபவர்களைப் பற்றிய படம் மட்டுமல்ல. பன்முகக் கலாசாரம், பன்முக வாழ்க்கை கொண்ட இளைஞர்களைப் பற்றிய படம். ஒவ்வொரு இளைஞனின் வாழ்க்கையையும் தரமணி பிரதிபலிக்கும் என்றார். 

தரமணி படம் வந்தபிறகு ஆண்டிரியாவுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். இதுபோன்ற நடிப்புத்திறமையை நான் பார்த்ததில்லை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT