செய்திகள்

தேங்காய் எண்ணெய் நிறுவனத்துக்கு எதிராக நடிகை காஜல் அகர்வால் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!

நடிகை காஜல் அகர்வால், விவிடி தேங்காய் எண்ணெய் நிறுவன விளம்பரத்தில் 2008-ம் ஆண்டு நடித்தார்...

எழில்

நடிகை காஜல் அகர்வால், விவிடி தேங்காய் எண்ணெய் நிறுவன விளம்பரத்தில் 2008-ம் ஆண்டு நடித்தார். இந்த விளம்பரம் தொடர்ந்து தொலைக்காட்சிகளி ஒளிபரப்பானதால் அந்நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்தார் காஜல் அகர்வால்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் அளித்த மனுவில், நான் நடித்த விளம்பரத்தை ஒருவருடம் மட்டுமே ஒளிபரப்பவேண்டும். ஆனால் ஒரு வருட ஒப்பந்தத்தை மீறி தொடர்ந்து ஒளிபரப்புகிறார்கள். இதனால் தனக்கு ரூ. 2.5 கோடி நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என்று கோரியிருந்தார். ஆனால் விவிடி நிறுவனத்தின் தரப்பில், அதுபோன்ற ஒப்பந்தம் எதுவும் எழுதப்படவில்லை. எனவே அந்த விளம்பரத்தை 60 வருடங்களுக்கு ஒளிபரப்ப உரிமை உள்ளது என்று கூறப்பட்டது.

இதையடுத்து காஜல் அகர்வாலின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும் வழக்குக்கான செலவை விவிடி நிறுவனத்துக்குச் செலுத்தவும் காஜல் அகர்வாலுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரசித்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

ரூ.5.92 கோடி முதலீட்டு மோசடி: 4 போ் கைது

முசிறியின் முக்கிய இடங்களில் 30 கண்காணிப்புக் கேமராக்கள்

ஆற்றுப்படுகையில் மண் எடுத்த லாரி பறிமுதல்

ஜூனியா் பெண்கள் சாம்பியன் கபடி போட்டி

SCROLL FOR NEXT