பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுஜாவுக்குப் பிறகு மற்றுமொரு புது வரவு போட்டியாளராக களமிறங்கியுள்ளார்.
சர்வதேச அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற நிகழ்ச்சி - பிக் பாஸ். தற்பொழுது இந்நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். சமீபத்தில் இந்த நிகழ்ச்சி ஆரம்பமானது. இந்த நிகழ்ச்சியின் மூலம் நடிகர் கமல்ஹாசன் முதன் முறையாக தொலைக்காட்சியில் அடியெடுத்து வைத்துள்ளார். திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 8.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது. சமூகவலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த விவாதங்கள் அதிகமாக உள்ளன. இதனால் அந்த நிகழ்ச்சிக்குப் பார்வையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் சில வாரங்களுக்கு முன்பு பிரபல நடிகை பிந்து மாதவி போட்டியாளராக உள்ளே நுழைந்தார். நேற்றைய நிகழ்ச்சியில் நடிகை சுஜா களத்தில் குதித்தார்.
இந்நிலையில் அடுத்தநாளே இன்னொரு புதுவரவை உள்ளே களமிறக்கியுள்ளது பிக் பாஸ் நிர்வாகம். இளம் நடிகர் ஹரிஷ் கல்யாண் புதுவரவாக பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் நுழைந்துள்ளார்.
சிந்து சமவெளி படத்தில் அறிமுகமானவர், ஹரிஷ் கல்யாண். பொறியாளன், வில் அம்பு போன்ற படங்களில் நடித்துள்ளார். இவருடைய அறிமுகம் குறித்த விளம்பரத்தை விஜய் டிவி சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.