செய்திகள்

பிக் பாஸில் மூன்றாவது புதிய போட்டியாளர்: முதல் நாளிலேயே ஆரவிடம் ஓவியா குறித்து கேள்வி!

எழில்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுஜா, ஹரிஷ் கல்யாணுக்குப் பிறகு மற்றுமொரு புது வரவு போட்டியாளராகக் களமிறங்கியுள்ளார். 

சர்வதேச அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற நிகழ்ச்சி - பிக் பாஸ். தற்பொழுது இந்நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். சமீபத்தில் இந்த நிகழ்ச்சி ஆரம்பமானது. இந்த நிகழ்ச்சியின் மூலம் நடிகர் கமல்ஹாசன் முதன் முறையாக தொலைக்காட்சியில் அடியெடுத்து வைத்துள்ளார். திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 8.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது. சமூகவலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த விவாதங்கள் அதிகமாக உள்ளன. இதனால் அந்த நிகழ்ச்சிக்குப் பார்வையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சில வாரங்களுக்கு முன்பு பிரபல நடிகை பிந்து மாதவி போட்டியாளராக உள்ளே நுழைந்தார். அதன்பிறகு புதுவரவாக நடிகை சுஜா களத்தில் குதித்தார். அடுத்தநாளே இளம் நடிகர் ஹரிஷ் கல்யாண் புதுவரவாக பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் நுழைந்தார். சிந்து சமவெளி படத்தில் அறிமுகமானவர், ஹரிஷ் கல்யாண். பொறியாளன், வில் அம்பு போன்ற படங்களில் நடித்துள்ளார். 

இந்நிலையில் இன்றும் ஒரு புதிய போட்டியளார் பிக் பாஸ் களத்திற்குள் நுழைந்துள்ளார். சின்னத்திரையில் கவனம் பெற்றுள்ள நடிகை காஜல் பசுபதி தான் அந்தப் புதிய போட்டியாளர். இவர் முதலில் விஜே-வாகப் பணியாற்றினார். பிறகு தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துவருகிறார்.

இவருடைய அறிமுகம் குறித்த வீடியோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. அதில் நடிகர் ஆரவிடம், உலகமே விரும்புகிற ஒரு பெண்ணை உங்களுக்கு மட்டும் ஏன் பிடிக்கவில்லை என்று கேட்டு அவருக்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளார் காஜல். 

இதுபோல வெவ்வேறு குணாதியசங்கள் கொண்ட மூன்று பேர் பிக் பாஸ் போட்டியில் நுழைந்திருப்பதால் நிகழ்ச்சி மேலும் சுவாரசியமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை கால பயிா்களில் வெப்ப தாக்கத்தை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பங்கள்

மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலம் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்

கழிவுநீா் கால்வாயில் வீசப்பட்ட பெண் குழந்தையின் உடல் மீட்பு

பாஜக வேட்பாளா்களை ஆதரித்து தில்லியில் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி பிரசாரம்

பிரத்தியங்கிரா தேவி கோயிலில் அமாவாசை யாகம்

SCROLL FOR NEXT