முகப்பு
செய்திகள்

புதிய கதாநாயகியுடன் விரைவில் ஆரம்பமாகும் மாரி 2!

முதல் பாகத்தை விடவும் உள்ளடக்கம் மற்றும் உணர்வுபூர்வமான காட்சிகள் இதில் அதிகமாக இருக்கும்...

Updated On : 18 ஆகஸ்ட், 2017 at 12:25 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 10:11 PM

மாரி 2 படத்தின் வேலைகள் ஆரம்பித்துவிட்டன. அக்டோபரில் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது.

இதுகுறித்து தனுஷ் ஒரு பேட்டியில் கூறியுள்ளதாவது: முதல் பாகத்தை விடவும் உள்ளடக்கம் மற்றும் உணர்வுபூர்வமான காட்சிகள் இதில் அதிகமாக இருக்கும். கதாநாயகியைத் தவிர இதர கதாபாத்திரங்களில் நடித்த நடிகர்கள் மாரி 2-விலும் தொடர்வார்கள் என்றார். 

மாரி படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ், படத்தொகுப்பாளர் ஜிகே பிரசன்னா, நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் மற்றும் இதர குணச்சித்திர நடிகர்கள் மாரி 2-விலும் தொடர்கிறார்கள். முதல் பாகத்தில் காஜல் அகர்வால் நடித்தார். இதில் புதிய கதாநாயகி நடிக்கவுள்ளார். இன்னமும் வில்லன், இசையமைப்பாளர் போன்றோர் ஒப்பந்தமாகவில்லை என்று கூறப்படுகிறது. அக்டோபரில் படப்பிடிப்பு ஆரம்பிப்பதால் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.