செய்திகள்

மறைந்த நகைச்சுவை நடிகர் அல்வா வாசு குடும்பத்துக்கு நடிகர் விஷால் நிதியுதவி!

எழில்

தன்னுடைய தேவி அறக்கட்டளை மூலமாக மறைந்த நடிகர் அல்வா வாசு குடும்பத்துக்கு நடிகர் விஷால் நிதியுதவி அளித்துள்ளார்.

உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்றுவந்த பிரபல நகைச்சுவை நடிகர் அல்வா வாசு (54) மதுரையில் வியாழக்கிழமை இரவு மரணமடைந்தார். மதுரை முனிச்சாலை ருக்குமணிபாளையத்தைச் சேர்ந்தவர் நடிகர் வாசு (54). திரைப்படத்தில் உதவி இயக்குநராக மணிவண்ணனிடம் பணிபுரிந்தார். நடிகர் சத்தியராஜ் நடித்த அமைதிப்படை திரைப்படத்தில் நடித்த பாத்திரத்தால் அல்வா வாசு என அழைக்கப்பட்டார். பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு உள்ளிட்டோருடன் 900 படங்களுக்கும் மேலாக நகைச்சுவை, குணச்சித்திர வேடங்களில் அவர் நடித்துள்ளார்.

கடந்த ஆண்டு அவருக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து சென்னையில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் தொடர் சிகிச்சைக்காக மதுரை மீனாட்சிமிஷன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றார். அவரது உடல்நலம் மிகவும் கவலைக்கிடமான நிலையில், அவரது குடும்பத்தினர் அவரை புதன்கிழமை முனிச்சாலையில் உள்ள வீட்டுக்கு அழைத்துச்சென்றனர். இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு அவர் மரணமடைந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர். அல்வா வாசு, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் முதுகலை தமிழ் படித்துள்ளார். அவருக்கு அமுதா என்ற மனைவியும், 7-ஆம் வகுப்பு படிக்கும் கிருஷ்ணஜெயந்திகா என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில் தன்னுடைய தேவி அறக்கட்டளை மூலமாக மறைந்த நடிகர் அல்வா வாசு குடும்பத்துக்கு நடிகர் விஷால் ரூ. 1 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தோ்வில் சரஸ்வதி வித்யாலயா 97 சதவீதம் தோ்ச்சி

பிளாஸ்டிக் பொறியியலில் டிப்ளமோ படிப்புகள்: மாணவா் சோ்கை தொடக்கம்

நியூ பிரின்ஸ் பள்ளி 100% தோ்ச்சி

விபத்தில் இளைஞா் உயிரிழப்பு: கல்லூரி மாணவா் பலத்த காயம்

மக்கள் கூடும் இடங்களில் அதிக கண்காணிப்பு கேமராக்கள்: வேலூா் மாவட்ட எஸ்.பி. உத்தரவு

SCROLL FOR NEXT