முகப்பு
செய்திகள்

என்னை ‘டிரிகர்’ செய்கிற சூழல்களுடன் போராடமுடியாது: பிக் பாஸ் பற்றி நடிகர் சக்தி வாசு

பெண்களை அவமதிக்கும்படி நான் எதுவும் சொல்லியிருந்தால் நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.

Updated On : 19 ஆகஸ்ட், 2017 at 11:13 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 10:11 PM

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெண்களை அவமதிக்கும்படி நான் நடந்துகொண்டிருந்தால் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் என நடிகர் சக்தி வாசு கூறியுள்ளார்.

கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய நடிகர் சக்தி வாசு தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

பார்வையாளர்களின் ஆதரவுக்கும் ஆலோசனைகளுக்கும் நன்றி. பெண்களை அவமதிக்கும்படி நான் எதுவும் சொல்லியிருந்தால் நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். நான் எப்போதுமே பெண்களுக்கு எதிராக நடந்துகொண்டதில்லை. அவர்களுக்கு ஆதரவாகவே இருந்துள்ளேன். 

Advertisement

24 மணி நேரத்தில் நடந்தவற்றில் நீங்கள் ஒன்றரை மணி நேரம் மட்டுமே பார்த்துள்ளீர்கள். இதில் யாரையும் நல்லவராகவே கெட்டவராகவே காண்பிக்கமுடியும். இங்கு யாரும் நல்லவரும் கிடையாது, கெட்டவரும் கிடையாது. அங்கிருந்து சரியான நேரத்தில் வெளியே வந்ததற்கு மகிழ்கிறேன்.

சூழல்களோடு நான் போராடத் தயார். ஆனால் உசுப்பேற்றுவதற்காக (டிரிகர் என்கிற வார்த்தையை அவர் பயன்படுத்தியுள்ளார்) உருவாக்கப்பட்ட சூழலில் எங்களால் போராடமுடியாது. ஒருவரோடு நேருக்கு நேர் மோதவும் தயார். ஆனால் என்னுடைய மற்றும் மற்றவர்களின் மனசாட்சிகளுக்கு எதிராக மோதமுடியாது. இப்போதுதான் உண்மையான ஆட்டம் தொடங்கியுள்ளது. விஜய் டிவிக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் நன்றி என்றார்.

சர்வதேச அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற நிகழ்ச்சி - பிக் பாஸ். தற்பொழுது இந்நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். சமீபத்தில் இந்த நிகழ்ச்சி ஆரம்பமானது. இந்த நிகழ்ச்சியின் மூலம் நடிகர் கமல்ஹாசன் முதன் முறையாக தொலைக்காட்சியில் அடியெடுத்து வைத்துள்ளார். திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 8.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது. சமூகவலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த விவாதங்கள் அதிகமாக உள்ளன. இதனால் அந்த நிகழ்ச்சிக்குப் பார்வையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சில வாரங்களுக்கு முன்பு பிரபல நடிகை பிந்து மாதவி போட்டியாளராக உள்ளே நுழைந்தார். அதன்பிறகு புதுவரவாக நடிகை சுஜா களத்தில் குதித்தார். அடுத்தநாளே இளம் நடிகர் ஹரிஷ் கல்யாண் புதுவரவாக பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் நுழைந்தார். இதோடு நடிகையும் விஜேவுமான காஜல் நேற்று முதல் புதிய போட்டியாளராக அறிமுகமாகியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.