முகப்பு
செய்திகள்

துருவ நட்சத்திரம், சாமி 2 படங்களில் கவனம் செலுத்தும் விக்ரம்!

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:41 PM
பகிர்:

ஸ்கெட்ச் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதால் அடுத்த இரு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் விக்ரம்.

விக்ரம் நடித்து வரும் "ஸ்கெட்ச்' படத்தின் கதைக் களம் வடசென்னையைப் பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. வாலு பட இயக்குநர் விஜய் சந்தர் இயக்கத்தில் தமன் இசையமைத்துள்ளார். வட சென்னையைப் பற்றி ஏற்கெனவே வந்த படங்கள் எல்லாம் அந்தப் பகுதி மக்களைப் படிப்பறிவு இல்லாத பாமரர்கள், ஏழைகள் என்றுதான் கூறி உள்ளன. வட சென்னையில் படித்த டாக்டர்கள், வக்கீல்கள் என்று உயர்மட்ட மக்களும் இருக்கிறார்கள். அப்படி ஒருவரின் பின்னணிதான் கதைக்களம். காதல், ஆக்ஷன், நகைச்சுவை கலந்த கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் கதாநாயகியாக தமன்னா நடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. தீபாவளிக்கு வெளியாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் அடுத்ததாக துருவ நட்சத்திரம், சாமி 2 ஆகிய படங்களில் கவனம் செலுத்தவுள்ளார் விக்ரம். 

கௌதம் வாசுதேவ்மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் - துருவ நட்சத்திரம். கதாநாயகியாக ரீது வர்மா நடிக்கிறார். இப்படத்தை கௌதம் வாசுதேவ்மேனனின் என்டர்டெயின்மென்ட் நிறுவனம், எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது. இன்னொரு கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துவருகிறார். இதில் ஐஸ்வர்யா ராஜேஷ்தான் விக்ரமின் ஜோடி எனவும், ரீது வர்மா கதையின் முக்கிய வேடம் ஏற்றுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மனோஜ் பரஹம்சா ஒளிப்பதிவாளராகப் பணியாற்றுகிறார். இவர் கெளதமுடன் இணைந்து விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் பணியாற்றியுள்ளார். பார்த்திபன், சிம்ரன், ராதிகா, தொகுப்பாளர் டிடி, சதீஷ் ஆகியோரும் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இதற்கு இசையமைக்கிறார்.

ஸ்கெட்ச் முடித்தபிறகு துருவ நட்சத்திரம் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார் விக்ரம். சென்னையில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இதையடுத்து அடுத்த மாதம் முதல் சாமி 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →