செய்திகள்

விஐபி 3 படத்தை இயக்க ஆர்வம்: செளந்தர்யா

எனக்கு நடிப்பில் விருப்பம் உள்ளதென மற்றவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் நிஜமாகவே...

எழில்

வேலையில்லா பட்டதாரி 3 படத்தை இயக்க ஆர்வமாக உள்ளதாக இயக்குநர் செளந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

வேலையில்லா பட்டதாரி 3 படத்தை இயக்க ஆவலாக உள்ளேன். எனக்கு நடிப்பில் விருப்பம் உள்ளதென மற்றவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் நிஜமாகவே எனக்கு நடிப்பில் விருப்பமில்லை. கேமராவுக்குப் பின்னால் இயக்குநராக இருக்கவே விரும்புகிறேன்.

வேலையில்லா பட்டதாரி பாகங்களைத் தாண்டி வேறு கதைகளையும் இயக்கவுள்ளேன். ஆனால் அதை இப்போதே கூறமுடியாது. என்னுடைய அடுத்தப் படம் எதுவென இன்னமும் முடிவு செய்யவில்லை. 

வேலையில்லா பட்டதாரி வெற்றி குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளேன். என் மீது நம்பிக்கை வைத்த தனுஷுக்கு நன்றி என்று கூறியுள்ளார். 

தாணு மற்றும் தனுஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள வேலையில்லா பட்டதாரி 2 படத்தை செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார். தனுஷ், அமலா பால், கஜோல் போன்றோர் நடித்துள்ளார்கள். இந்தப் படம் ஜூலை 28-ம் தேதி வெளிவருவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. பிறகு இப்படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் ஆகஸ்ட் 11 அன்று உலகம் முழுக்க 1000 திரையரங்குகளில் வெளியானது.

என்னுடைய மூன்று பெரிய ஹிட்களில் விஐபி2-வும் ஒன்று. எப்போது என்று தெரியவில்லை. ஆனால் வேலையில்லா பட்டதாரி 3 படத்தை நிச்சயம் எடுப்போம். இதற்கான வாய்ப்புகள் ஏற்கெனவே வந்துவிட்டன என்று தனுஷும் அடுத்தப் பாகம் குறித்துப் பேசியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எந்த வருத்தமும் இல்லை! தலைமை நீதிபதியைத் தாக்க முயற்சித்த வழக்குரைஞர் கருத்து!

ரூ.90 ஆயிரத்தை நெருங்கிய தங்கம் விலை! கலக்கத்தில் நடுத்தர வர்க்கம்!

மழைநீர் வடிகால் சீரமைப்புப் பணிகள்! நள்ளிரவில் உதயநிதி ஆய்வு!

இந்தியாவுக்கு எதிரான ஓடிஐ, டி20 தொடர்: ஆஸி. அணியில் மேக்ஸ்வெல், கம்மின்ஸுக்கு இடமில்லை!

ராமதாஸை சந்தித்து நலம்விசாரித்தார் நயினார் நாகேந்திரன்!

SCROLL FOR NEXT