செய்திகள்

அரவிந்த்சாமி நடிக்கும் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்தில் ஒப்பந்தமாகியுள்ள நடிகை!

மலையாள இயக்குனர் சித்திக் இயக்கத்தில், அரவிந்த்சாமி, அமலா பால், ரமேஷ் கண்ணா, சூரி,

DIN

மலையாள இயக்குனர் சித்திக் இயக்கத்தில், அரவிந்த்சாமி, அமலா பால், ரமேஷ் கண்ணா, சூரி, ரோபோ சங்கர் ஆகியோர் நடிக்கும் காதல் மற்றும் நகைச்சுவை ஜானர் திரைப்படம் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’. மலையாளத்தில் 2015-ம் ஆண்டு மம்மூட்டி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த 'பாஸ்கர் தி ராஸ்கல்' திரைப்படத்தின் தமிழ் ரீமேக் தான் இது.  

ஒற்றைப் பெற்றோருடன் வாழ்ந்து வரும் குழந்தைகள் இருவரும் நட்பாகி, எப்படி பெற்றோரைச் சேர்த்து வைக்கிறார்கள் என்பது தான் 'பாஸ்கர் தி ராஸ்கல்' படத்தின் ஒன்லைன் கதை. (குழந்தையும் தெய்வமும் படக் கதை நினைவிருக்கிறதா?).

இப்படத்தில் அமலாபாலின் மகளாக நைனிகா நடிக்கிறார். அரவிந்த்சாமியின் மகனாக நடிப்பதற்கு ஜெயம் ரவி மகன் ஆரவ்வைக் கேட்டனர். ஆனால், அவர் மறுக்கவே தற்போது மாஸ்டர் எம்.பி. ராகவன் அந்தக் கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.

நடிகை நிகிஷா படேல் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சமீபத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன் தலைவன், நாரதன் போன்ற படங்களில் நிகிஷா நடித்துள்ளார். 

படப்பிடிப்பு பணிகள் வேகமாக நடந்துவரும் நிலையில், இப்படம் 2018 ஆகஸ்ட் மாதம் வெளிவரும் என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளி மாணவா்களுக்கு சீருடைகள் வழங்கல்

கூட்டம் நடத்தும் விஜய் முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும்: ராஜேஷ்குமாா் எம்எல்ஏ

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

வீரவநல்லூரில் முப்பெரும் விழா

அலெக்சாண்டா் மிஞ்சின் பிறந்தநாள் விழா

SCROLL FOR NEXT