செய்திகள்

சிரஞ்சீவி நடிக்கும் ‘சைரா நரசிம்ம ரெட்டி’ திரைப்படம் மூலம் டோலிவுட்டில் களமிறங்கும் விஜய் சேதுபதி!

தமிழில் வெற்றிகரமான நடிகராக கருதப்படும் விஜய் சேதுபதி, இத்திரைப்படத்தின் மூலம் டோலிவுட்டிலும் முதல்முறையாகக் கால் பதிக்கவிருக்கிறார்.

சரோஜினி

சிரஞ்சீவி நடிப்பில் அடுத்து தயாராகவிருக்கும் புதிய தெலுங்குத் திரைப்படம், சுதந்திரப் போராட்ட வீரர் உய்யாலவாட நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது. உய்யாலவாடா ரெட்டி,  பிரிட்டிஷ் ஆட்சியை இந்தியாவிலிருந்து துரத்துவதற்காக நடத்தப்பட்ட முதல் புரட்சி எனக்கருதப்பட்ட சிப்பாய் கலகத்துக்கும் முன்பே ஆந்திராவில் மக்களிடையே சுதந்திர உணர்வை கொழுந்து விட்டு எரியச் செய்தவராகக் கருதப்படுகிறார். அவரது வாழ்க்கையைச் சித்தரிக்கும் இத்திரைக் காவியத்தில் சிரஞ்சீவியுடன் நயன் தாரா, அமிதாப் பச்சன், கிச்சா சுதீப் உள்ளிட்டோருடன் விஜய் சேதுபதியும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறாராம். இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி ஏற்று நடிக்கவிருப்பது ‘ரேனாட்டி சூரியடு’ எனும் காத்திரமான கதாபாத்திரம். கிட்டத்தட்ட சிப்பாய் கலகத்தின் மாவீரன் மங்கள் பாண்டே கதாபாத்திரத்துக்கு இணையானது. தமிழில் வெற்றிகரமான நடிகராக கருதப்படும் விஜய் சேதுபதி, இத்திரைப்படத்தின் மூலம் டோலிவுட்டிலும் முதல்முறையாகக் கால் பதிக்கவிருக்கிறார். இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டதுடன், படத்தில் பங்கேற்கவிருக்கும் படக்குழுவினரின் பெயரும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

படத்தின் இயக்குனர் சுரேந்தர்
ஒளிப்பதிவு ரவிவர்மன்
இசை இசைப்புயல் ஏ ஆர் ரகுமான்
திரைக்கதை வசனம் பருச்சூரி சகோதரர்கள்
இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தேஜா.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முசிறியின் முக்கிய இடங்களில் 30 கண்காணிப்புக் கேமராக்கள்

ஆற்றுப்படுகையில் மண் எடுத்த லாரி பறிமுதல்

ஜூனியா் பெண்கள் சாம்பியன் கபடி போட்டி

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: ஆட்சியா் ஆய்வு

கரூா் மாவட்டத்தில் பரவலாக மழை

SCROLL FOR NEXT