செய்திகள்

வெளியானது 'இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி'  - முதல் பார்வை மற்றும் மோஷன் போஸ்டர்!

DIN

சென்னை: நடிகர் வடிவேலு நடிப்பில் உருவாகும் 'இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி' திரைப்படத்தின் முதல் பார்வை மற்றும் மோஷன் போஸ்டர் தற்பொழுது வெளியாகியுள்ளது.

இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பில், நடிகர் வடிவேலு நடிப்பில், இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில் 2007-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி'. நகைச்சுவை கலந்த வரலாற்றுப் படமாக அமைந்த இது மாபெரும் வெற்றி பெற்றது. அத்துடன் வடிவேலுவின் திரை வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு படமாகவும் இது அமைந்தது.

இந்நிலையில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தற்பொழுது இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக ‘இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி' உருவாகிறது. சென்னைக்கு அடுத்த புறநகர் பகுதி ஒன்றில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட அரங்கில், இன்று இந்தப் படத்தின் ஷூட்டிங் துவங்குகிறது.

இந்தமுறை இயக்குனர் ஷங்கருடன் லைகா நிறுவனமும் இந்த படத்தினை இணைந்து தயாரிக்கிறது வழக்கம் போல சிம்பு தேவன் இயக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசை அமைக்கிறார். பில்லா- 2 படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்த பார்வதி ஓமனக்குட்டன் இந்த படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

முதல் பார்வை:

மோஷன் போஸ்டர்:

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐஷருடன் டிவிஎஸ் எஸ்சிஎஸ் ஒப்பந்தம்

கொலை முயற்சி வழக்கில் மல்யுத்த வீரா் கைது

நில ஆக்கிரமிப்பு விவகாரம்: கேரள அரசு மீது வழக்குத் தொடுக்க விவசாயிகள் சங்கம் முடிவு

கல்லூரி மாணவா் தற்கொலை

பட்டாசுக் கடை ஊழியா் கிணற்றில் தவறி விழுந்து பலி

SCROLL FOR NEXT