முகப்பு
செய்திகள்

விஷால் நடிக்கும் 'துப்பறிவாளன்' எப்போது ரிலீஸ் ஆகும்?

தற்போது போஸ்ட் புரொடக்‌ஷனும் முடிவடையும் நிலையில் உள்ள துப்பறிவாளன் செப்டம்பர் 14-ம் தேதி ரிலீஸ் ஆகலாம் என்கிறது படக்குழுவினர்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:44 PM
பகிர்:

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்த ‘மதகஜராஜா’ திரைப்படம் இன்னும் வெளிவராத நிலையில், விஷால் பெரிதும் எதிர்ப்பார்க்கும் படம் மிஷ்கினின் ’துப்பறிவாளன் தான்’. அரோல் கொரேலி இசையமைப்பில் கார்த்திக் வெங்கட்ராமன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தை ‘மெட்ராஸ் எண்டர்ப்ரைசஸ்’ எஸ்.நந்தகோபாலுடன் இணைந்து விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’மூலம் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளார். 

இந்தப் படத்தில் கணியன் பூங்குன்றன் என்ற துப்பறிவாளனாக நடிக்கிறார் விஷால். இப்படத்தில் ஆண்ட்ரியா, சிம்ரன், இயக்குநர் கே.பாக்யராஜ், வினய், பிரசன்னா ஆகியோரும் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளனர். விஷாலுடன் பயணிக்கும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பிரசன்னா நடித்துள்ளார்.

கதையுடன் இணைந்து மெல்லிய காதல், எதிர்பாராத திருப்பங்கள், புத்திசாலித்தனமான துப்பறியும் காட்சிகள், மிகச் சிறப்பான சண்டைக் காட்சிகள் என படத்தை மெருகேற்றி இருக்கிறார் மிஷ்கின். சமீபத்தில் படக்குழுவால் டிவீட் செய்யப்பட்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள், சண்டைக் காட்சிகளின் மேக்கிங் வீடியோ மற்றும் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் டீஸர் ரசிகர்களை மகிழ்வித்தது. படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் ஆகஸ்ட் இரண்டாம் வாரம் வெளிவரும் என்ற செய்திகள் வெளிவந்தன. தற்போது போஸ்ட் புரொடக்‌ஷனும் முடிவடையும் நிலையில் உள்ள துப்பறிவாளன் செப்டம்பர் 14-ம் தேதி ரிலீஸ் ஆகலாம் என்கிறார்கள் படக்குழுவினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.