முகப்பு
செய்திகள்

கோலமாவு கோகிலா: நயன்தாராவின் புதிய படம்!

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்தப் படத்தை நெல்சன் இயக்குகிறார். இசை - அனிருத்...

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:44 PM
பகிர்:

லைக்கா நிறுவனம் தயாரிக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் நயன்தாரா. இதுபற்றிய அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்தப் படத்தை நெல்சன் இயக்குகிறார். இசை - அனிருத். இந்தப் படத்துக்குக் கோலமாவு கோகிலா (கோகோ) என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்தப் படம் தவிர அறம், வேலைக்காரன், இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம் ஆகிய தமிழ்ப் படங்களிலும் நடித்துவருகிறார் நயன்தாரா. இதுதவிர 2 தெலுங்குப் படங்கள், ஒரு மலையாளப் படம் என தொடர்ச்சியாக மூன்று மொழிகளிலும் நடித்து வரும் நயன்தாராவுக்கு 2017, 2018 ஆகிய இரு வருடங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகவுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.