செய்திகள்

ஒரு படத்தை விமரிசனம் செய்ய எல்லோருக்கும் உரிமை உண்டு: ‘விவேகம்’ சர்ச்சை குறித்து பாடகர் ஸ்ரீனிவாஸ்

DIN

சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் - விவேகம். இப்படத்தில் காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன், விவேக் ஓபராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் விவேக் ஓப்ராய் நடித்துள்ளார். இது அவர் நடிக்கும் முதல் தமிழ்ப் படம். இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. இசை - அனிருத். விவேகம் படம் தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது. இந்தப் படம் கடந்த வியாழன் அன்று வெளியானது. படத்துக்குக் கலவையான விமரிசனங்கள் வெளிவந்தாலும் வசூலில் பல சாதனைகளைப் படைத்துவருகிறது.

தன்னுடைய யூடியூப் தளத்தில் விவேகம் படத்தைக் கடுமையாக விமரிசனம் செய்திருந்தார் ‘ப்ளூசட்டை’ மாறன். அவருடைய விமரிசனத்துக்குக் கண்டனம் தெரிவித்து கோலி சோடா படப்புகழ் இயக்குநர் விஜய் மில்டன் வீடியோ பதிவொன்றை வெளியிட்டுள்ளார். மாறன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் மாறனுக்கு ஆதரவாக பாடகர் ஸ்ரீனிவாஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது: 

ப்ளூசட்டை விமரிசனம் குறித்து திரையுலகினரில் பலர் விமரிசனம் செய்துள்ளார்கள். ஒரு படத்தை விமரிசனம் செய்ய எல்லோருக்கும் உரிமை உண்டு. இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில் அதைத் தடுத்து நிறுத்தமுடியாது. பார்வையாளர்களை ஒரு படத்தைப் பார்க்குமாறு கட்டாயப்படுத்தமுடியாது. பார்வையாளர்களையும் விமரிசகர்களையும் மதிக்கவேண்டும். இன்றைய சூழலில் யார் வேண்டுமானாலும் விமரிசனம் செய்யமுடியும். அதை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.

எனக்குப் பிடிக்காத படங்களை ப்ளூசட்டை கடுமையாக விமரிசனம் செய்துள்ளார். அவருடைய கருத்துகளில் எனக்கு உடன்பாடு உண்டு. அவர் மற்ற படங்களைப் பாராட்டியும் உள்ளார் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

SCROLL FOR NEXT