செய்திகள்

இது திருமண விழா அல்ல, ஆரம்ப விழா: கமல்ஹாசன்

இதை திருமண விழாவாக நினைக்க வேண்டாம், ஆரம்ப விழாவாக எடுத்துக்கொள்ள வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் புதன்கிழமை தெரிவித்தார்.

DIN


நடிகர் கமல்ஹாசன் நற்பணி இயக்க நிர்வாகி ஒருவரது இல்லத் திருமண வரவேற்பு விழா கோவையில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது: 

இதை திருமண விழாவாக நினைக்காமல் ஆரம்ப விழாவாக எண்ணுகிறேன். அரசியல் சூழலை இப்படியே விட்டு வைக்காமல் அதனை மாற்ற வேண்டியது நமது கடமை. 

ஓட்டுக்காக பணம் பெற்று திருடர்களை அனுமதித்து விட்டோம். இந்த சமூகத்தின் மீதான கோபம் அதிகரித்து கொண்டே இருக்கிறது. அரசியலை மாற்ற வேண்டியது நமது கடமை. 

தமிழகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள தொடர்ந்து போராட வேண்டும். இது திருமண விழா அல்ல. ஆரம்ப விழா என்று கூறினார். 

மேலும், தலைமை ஏற்க தைரியம் வந்து விட்டதா என்று என்னை பார்த்து கேட்கிறார்கள். நான் கேட்கிறேன், தலைமை ஏற்க உங்களுக்கு தைரியம் வந்து விட்டதா? என்று கேள்வி எழுப்பினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுக்கிர தோஷம் நீக்கும் ஸ்ரீரங்கம்... ஜோதிட வல்லுநர் ஏ.எம்.ஆர். சொல்வதென்ன?

திராவிட மாடல் 2.0 மீண்டும் அமைய பெண்கள் முடிவெடுத்து விட்டார்கள்: அமைச்சர் கே.என். நேரு

இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ரூ. 22.20 கோடி அபராதம்: மத்திய அமைச்சர் தகவல்

இப்படியொரு சம்பவம் நடந்தால்... லாக்டவுன் - திரை விமர்சனம்!

விருதுநகர் மாவட்டத்தில் பல இடங்களில் நில அதிர்வு!

SCROLL FOR NEXT