செய்திகள்

பிரபாஸின் ‘சாஹூ’ திரைப்படத்தில் கிரிக்கெட் கமெண்ட்ரி புகழ் மந்த்ரா பேடி!

சரோஜினி

கிரிக்கெட் கமெண்ட்ரி புகழ் மந்த்ரா பேடியை மறக்க முடியுமா? உலகக் கோப்பை கிரிக்கெட் கமெண்ட்ரி பிரபலஸ்தர் எனும் நிலை தாண்டி அவர் பல அவதாரங்கள் எடுத்திருந்தாலும் நடிகை என்ற அவதாரத்தில் மந்த்ராவை அவரது ரசிகர்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை. தமிழில்,சிம்புவின் ‘வல்லவன்’ திரைப்படத்தில் தலைகாட்டியவர் அதன் பின் பாலிவுட்டில் நடித்துக் கொண்டிருந்தார். தான் இருக்கும் இடமெல்லாம் தன்னையே சென்ட்டர் ஆஃப் அட்ராக்‌ஷனாக ஆக்கிக் கொள்ளத் தெரிந்த மந்த்ரா பேடி அகில உலகப் பிரபலமானது ஆச்சர்யமில்லை. இந்தியாவில் மந்த்ரா பேடியைத் தெரியாதவர்கள் என எவருமில்லை. அத்தகைய மந்த்ரா பேடி பிரபாஸின் ‘சாஹூ’ திரைப்படத்தில் நடிக்கக் கமிட் ஆகியிருக்கிறாராம். மந்த்ரா, சாஹூவில் நடிக்கப்போவதை, சாஹூ படக்குழு உறுதி செய்திருக்கிறது. நடிக்கப் போகிறாரே தவிர, அவர் என்ன மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்? என்பது இன்னும் வெளியிடப்படவில்லை.

150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகவிருக்கும் ‘சாஹூ’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மும்மொழிகளில் படமாக்கப்படவிருக்கிறது. இப்படத்தில் விசுவல் எஃபெக்ட் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு திரைப்படமாகி வருகிறது, படத்தின் பிரமாண்டத்தைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், இப்படத்தின் முன்னோட்ட டீஸருக்காக மட்டுமே சுமார் 1.5 கோடி ரூபாய் செலவளிக்கப்பட்டுள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். பிரபாஸின் முந்தைய திரைப்படமான பாகுபலி - தி கன்குளூசன் திரைப்படத்தில் சாஹூவுக்கான முன்னோட்ட டீஸர் வெளியானது.

தெலுங்கில் ‘ரன் ராஜா ரன்’ திரைப்படப் புகழ் சுஜித் தான் சாஹூவின் இயக்குனர். இசை... ஷங்கர் ஈஷன் லாய். சண்டைக்காட்சிகளை இழைத்து, இழைத்து  உருவாக்கவிருப்பது பீட்டர் ஹெயின் மாஸ்டர். மேலும் இத்திரைப்படத்தில் பிரபாஸுடன் டூயட் பாடவிருப்பது பாலிவுட் இளைஞர்களின் கனவுக்கன்னியான ஷ்ரத்தா கபூர். படத்தின் தயாரிப்பாளர்கள் UV கிரியேஷன்ஸ் நிறுவனத்தினர்.     

Image courtesy: telugu bullet.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விராலிமலையில் ஒரே நாளில் 98 மி.மீ. மழை பதிவு!

வாசுதேவநல்லூர் அருகே அரசுப் பேருந்து மீது கல்வீச்சு

விழுப்புரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் சோதனை: கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்

தஞ்சையில் நள்ளிரவில் வக்கீல் குமாஸ்தா வெட்டிக் கொலை!

கொடைக்கானலில் தொடர் மழை: படகுப் போட்டி ரத்து!

SCROLL FOR NEXT