முகப்பு
செய்திகள்

மாயவன் விலகியது; செப்டம்பர் 1 அன்று மூன்று படங்கள் வெளியாகின்றன!

விஜய் சேதுபதி, காயத்ரி நடிப்பில் ரஞ்சித் ஜெயக்கோடி இயக்கிய படம் - புரியாத புதிர்...

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:46 PM
பகிர்:

இந்த வாரம் செப்டம்பர் 1 அன்று மூன்று படங்கள் வெளிவரவுள்ளன. புரியாத புதிர், குரங்கு பொம்மை, ஒரு கனவு போல.

செப்டம்பர் 1 அன்று மாயவன் படம் வெளியாக இருந்தது. இந்நிலையில் அதன் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. சந்தீப் கிஷன், லாவண்யா திரிபாதி, டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'மாயவன்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் சி.வி.குமார். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தை சி.வி.குமார் தயாரித்துள்ளார். இந்தப் படத்துக்குத் தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. 

விஜய் சேதுபதி, காயத்ரி நடிப்பில் ரஞ்சித் ஜெயக்கோடி இயக்கிய படம் - புரியாத புதிர். இந்தப் படத்தின் வெளியீடு பல்வேறு காரணங்களால் தள்ளிப் போனது.  இந்நிலையில் புரியாத புதிர் படம் செப்டம்பர் 1 அன்று வெளிவரவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த கவண், விக்ரம் வேதா ஆகிய இரு படங்கள் வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து புரியாத புதிர் படம் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. 

பாரதிராஜா, விதார்த் நடிப்பில் நித்திலன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - குரங்கு பொம்மை. ராமகிருஷ்ணன், செளந்தர்ராஜன், புதுமுகம் அமலா நடிப்பில் விஜயசங்கர் இயக்கியுள்ள படம் - ஒரு கனவு போல. இந்த இரு சிறிய படங்களும் விஜய் சேதுபதி படத்துக்கு எந்தளவுக்குப் போட்டி கொடுக்கும் என்பது இந்த வார இறுதியில் தெரிந்துவிடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.