செய்திகள்

மணி ரத்னம் படத்தில் நடிப்பது உறுதி; சந்தானம் படவிழா மேடையில் சர்ச்சைகளுக்கு விளக்கமளிப்பதாக சிம்பு தகவல்!

சந்தானம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மனம் திறந்து பேசவுள்ளதாக சிம்பு தகவல் தெரிவித்துள்ளார்...

எழில்

சந்தானம் படத்துக்கு இசையமைத்துள்ள சிம்பு, அப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மனம் திறந்து பேசவுள்ளதாகத் தகவல் தெரிவித்துள்ளார்.

ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கடந்த ஜூன் மாதம் வெளியான படம் - அன்பானவன் அசராதவன் அடங்காதவன். யுவன் இசையமைத்த இப்படத்தில் ஸ்ரேயா, தமன்னா, சனாகான் போன்றோர் நடித்தார்கள். சிம்பு 3 விதமான கெட்டப்களில் நடித்தார். இப்படத்தின் தயாரிப்பாளர் - மைக்கேல் ராயப்பன். இந்நிலையில் சிம்பு குறித்து மைக்கேல் ராயப்பன் ஓர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 

இந்த விவகாரத்தால், வேறு எந்தப் படத்திலும் நடிக்கமுடியாதபடி சிம்புவுக்கு தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு விதித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. 

இந்நிலையில் இணையத்தளம் ஒன்றுக்கு சிம்பு அளித்த பேட்டியில் கூறியதாவது: மணி ரத்னம் சார் படத்தில் நடிக்க நான் ஒப்பந்தமானதிலிருந்து அப்படத்திலிருந்து வெளியேறிவிட்டதாகச் செய்திகள் வெளிவருகின்றன. நான் அப்படத்தில் நடிக்கக்கூடாது எனப் பலர் முயற்சி செய்கிறார்களா? ஜனவரி 20 முதல் மணி ரத்னம் சார் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறேன்.

சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள சக்க போடு போடு ராஜா படத்துக்கு இசையமைத்துள்ளேன். நாளை இசை வெளியீட்டு விழா நடைபெறுகிறது. தனுஷ் பாடல்களை வெளியிடுகிறார். என்மீதான சமீபத்திய குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை நான் பதில் அளிக்கவில்லை. ஆனால் இசை வெளியீட்டு விழாவில் என் மனத்தில் உள்ளதை ரசிகர்களுக்குத் தெரிவிப்பேன் எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரோல் பால் உலகக் கோப்பை: இந்தியாவுக்கு தங்கம்

ரூ.5.74 கோடி மோசடி: என்எல்சி ஊழியா் கைது

கிணற்றில் தவறி விழுந்து மாணவி உயிரிழப்பு

தூத்துக்குடியில் மீன்களின் விலை உயா்வு

மாநில அளவிலான கபடிப் போட்டி: மாதாபட்டணம் பள்ளி மாணவிகள் முதலிடம்

SCROLL FOR NEXT