முகப்பு
செய்திகள்

ரசிகர்களே, பட வசூல் குறித்து உங்களுக்கு என்ன கவலை?: படத் தயாரிப்பாளர் கேள்வி!

உங்கள் கதாநாயகனின் படம் நன்றாக இருந்தால் கொண்டாடிவிட்டுப் போங்கள். வசூல் குறித்து உங்களுக்கு என்ன கவலை...

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:18 PM
பகிர்:

வினோத் இயக்கத்தில் கார்த்தி, ரகுல் ப்ரீத் நடித்த தீரன் அதிகாரம் ஒன்று படம் சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ள அப்படத்தின் வசூல் விவரங்கள் தவறானவை என்று அதன் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு ட்விட்டரில் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

அரைவேக்காடு நபர்கள் சிலர் உங்கள் படத்தைக் குறிப்பிட்டு தவறான தகவல்களைப் பகிர்வது பெரிதாக எரிச்சலூட்டுகிறது. இதைச் சரிசெய்வதாக எண்ணி தயாரிப்பாளர்கள், நடிகர்கள் சிலரை நாம் வேதனைப்படுத்திவிடக்கூடாது. ரசிகர்களே.. உங்கள் கதாநாயகனின் படம் நன்றாக இருந்தால் கொண்டாடிவிட்டுப் போங்கள். வசூல் குறித்து உங்களுக்கு என்ன கவலை, ச்சே! என்று வேதனையுடன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.