முகப்பு
செய்திகள்

தமிழ்படம் 2.0: தொடங்கியது இயக்குநர் சிஎஸ் அமுதனின் புதிய படம்!

தலைப்பிலேயே கிண்டல் தொனி உள்ளதால் முதல் பாகம் போலவே இந்தப் படத்தின் நகைச்சுவைக் காட்சிகளும்...

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:18 PM
பகிர்:

ரஜினி - ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் படம் - 2.0. இந்நிலையில் சிலவருடங்களுக்கு முன்பு வெளியான தமிழ்படம் படத்தின் அடுத்தப் பாகம் - தமிழ்படம் 2.0 என்கிற பெயரில் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ்படத்தை இயக்கிய சி.எஸ். அமுதன் இப்படத்தையும் இயக்கவுள்ளார். அவருடைய இரண்டாவது படமான ரெண்டாவது படம் இன்னும் வெளிவராத நிலையில் தனது அடுத்தப் படத்தைத் தொடங்கியுள்ளார். தலைப்பிலேயே கிண்டல் தொனி உள்ளதால் முதல் பாகம் போலவே இந்தப் படத்தின் நகைச்சுவைக் காட்சிகளும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிர்ச்சி சிவா, ஐஸ்வர்யா மேனன், சதீஷ், திஷா பாண்டே போன்றோர் தமிழ்படம் 2.0-வில் நடிக்கிறார்கள். இந்தப் படம் பூஜையுடன் தொடங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.