முகப்பு
செய்திகள்

பிரபு தேவா நடிப்பில் தங்கர் பச்சான் இயக்கியுள்ள களவாடிய பொழுதுகள் பட டிரெய்லர்!

தனது படங்களிலேயே மிகவும் தனக்குப் பிடித்த படம் களவாடிய பொழுதுகள் என தயாரிப்பாளர்...

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:20 PM
பகிர்:

பல ஆண்டுகளுக்கு முன்பே இயக்குநர் தங்கர் பச்சான் இயக்கிய படம் - களவாடிய பொழுதுகள். பிரபு தேவா, பூமிகா, பிரகாஷ் ராஜ் போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - பரத்வாஜ். 

வெளியீட்டுச் சிக்கல்களால் முடங்கிக் கிடந்த படம் தற்போது வெளிவரத் தயாராகவுள்ளது.  இந்த மாதம் 29 அன்று களவாடிய பொழுதுகள் படம் வெளியாகவுள்ளது. ஐங்கரன் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது.

எனது படங்களிலேயே மிகவும் தனக்குப் பிடித்த படம் களவாடிய பொழுதுகள் என தயாரிப்பாளர் கருணாமூர்த்தி கூறியுள்ளார். காதலிக்கப் போகிறவர்களுக்கு ஒரு எச்சரிக்கை. காதலித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஒரு பாடம். காதலித்து முடித்தவர்களுக்கு மீண்டும் ஒரு  கடந்தகால நினைவூட்டலாக இப்படத்தை  படைத்திருக்கிறேன் என்கிறார் இயக்குநர் தங்கர் பச்சான்.

இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.