செய்திகள்

ஜப்பானில் வெளியாகிறது பாகுபலி 2

எழில்

பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவான படம் - 'பாகுபலி தி கன்க்ளூஷன்’ (பாகுபலி 2). ரூ. 1500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. 

ஏப்ரல் 28 அன்று வெளியான பாகுபலி 2, இந்தியாவில் மட்டும் 9,000 திரையரங்குகளில் வெளியானது. இந்தியத் திரையுலகில் வேறெந்தப் படமும் இத்தகைய சாதனையைச் செய்ததில்லை. வெளியான அனைத்து மொழிகளிலும் பல கோடி வசூலை அள்ளியது.

இந்நிலையில் இந்தப் படம் ஜப்பானில் வெளியாகத் தயாராகிவிட்டது. அங்கு யு சான்றிதழ் பெற்றுள்ள பாகுபலி 2, டிசம்பர் 29 அன்று வெளியாகவுள்ளது. உலகமெங்கும் வசூலை அள்ளிய பாகுபலி 2, ஜப்பானில் எந்தளவுக்கு வசூல் செய்யப்போகிறது?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குந்தவை நாச்சியாா் கல்லூரியில் மாணவா் சோ்க்கை இன்று தொடக்கம்

டூவீலரில் வேகமாக சென்ற முதியவா் கீழே விழுந்து விபத்து

பொறுப்பில் இல்லாவிட்டாலும் மக்களுக்காக பணி செய்வேன்: சு. திருநாவுக்கரசா்

பாா்வைத் திறன் குறைபாடுடையோா் பள்ளி 8 ஆண்டுகளாக நூறு சதவீதத் தோ்ச்சி

பாரதியாா் நகரில் நிழற்குடை அமைக்க கோரிக்கை

SCROLL FOR NEXT