செய்திகள்

ரெமோ பட வில்லனுடன் ஜோடியாக நடிக்கும் ஓவியா!

எழில்

ரெமோ படத்தில் கீர்த்தி சுரேஷ் - மலையாள நடிகரான அன்சன் பால் ஆகியோருக்குத் திருமண நிச்சயதார்த்தம் நடக்கும். பிறகு சிவகார்த்திகேயன் கீர்த்தியைக் காதலித்ததால் இறுதியில் வில்லனாகவும் மாறுவார் அன்சன் பால். இந்தப் படத்தின் மூலம் தமிழில் அடையாளம் பெற்ற அன்சன், ரெமோவுக்கு அடுத்ததாக மலையாளம், தமிழில் வெளியான சோலோ படத்திலும் நடித்திருந்தார். 

இந்நிலையில் பிக் பாஸ் மூலம் புதிய பேர், புகழை அடைந்திருக்கும் ஓவியாவுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு அன்சல் பாலுக்குக் கிடைத்துள்ளது. அனிதா இயக்குநராக அறிமுகமாகும் இன்னமும் பெயரிடப்படாத படத்தில் முன்னணி கதாபாத்திரங்களின் வேடத்தில் ஓவியா, அன்சன் பால் நடிக்கவுள்ளார்கள். 

பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளரான ஆரவ் இந்தப் படத்தில் ஓவியாவின் ஜோடியாக நடிக்கவிருந்த நிலையில் திடீரென அவர் இந்தப் படத்திலிருந்து விலகினார். இதையடுத்து அன்சன் பாலுக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. 

அன்சன் பால் வசம் இரு மலையாளப் படங்கள் உள்ளன. ஓவியா, காஞ்சனா 3 படத்தில் நடித்து வருகிறார். வித்தியாசமான நடிகர்களின் தேர்வினால் இந்தப் படம் இப்போதிருந்தே எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

SCROLL FOR NEXT