முகப்பு
செய்திகள்

மாரி 2 படத்தில் வரலட்சுமி!

விக்ரம் வேதா, சத்யா போன்ற படங்கள் மூலமாக கவனம் பெற்றுள்ள வரலட்சுமிக்கு இது இன்னொரு முக்கிய படமாக...

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:28 PM
பகிர்:

தனுஷ் - இயக்குநர் பாலாஜி மோகன் கூட்டணியில் உருவாகும் மாரி 2 படத்தில் வரலட்சுமி நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார். இந்நிலையில் முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தப் படத்தில் நடிக்க மிகவும் ஆர்வமாக உள்ளேன். இந்த வாய்ப்பளித்த தனுஷ் மற்றும் இயக்குநர் பாலாஜி மோகனுக்கு நன்றி என்று ட்வீட் செய்துள்ளார் வரலட்சுமி.  

சமீபத்தில் விக்ரம் வேதா, சத்யா போன்ற படங்கள் மூலமாக கவனம் பெற்றுள்ள வரலட்சுமிக்கு இது இன்னொரு முக்கிய படமாக அமையவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.