செய்திகள்

சிங்கம் 4: உறுதி செய்தார் இயக்குநர் ஹரி!

நானும் சூர்யாவும் இணைந்து நிச்சயமாக சிங்கம் 4 படம்...

எழில்

ஹரி இயக்கத்தில் சூர்யா, ஸ்ருதி ஹாசன், அனுஷ்கா நடித்து வெளியான படம் சி 3 (சிங்கம் படத்தின் மூன்றாம் பாகம்). இதற்கு முன்பு வெளிவந்த இரு பாகங்களும் வெற்றி பெற்றதால் சூர்யா - இயக்குநர் ஹரி கூட்டணியில் உருவான சி 3 படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு உருவானது. இந்தப் படம், பிப்ரவரி 9 அன்று வெளியானது. 

மற்ற இரு பாகங்களைப் போல இந்தப் படமும் ரசிகர்களின் ஆதரவைப் பெற்று வெளியான 6 நாள்களில் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளது. இத்தகவலை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. இதையடுத்து, நடிகர் சூர்யா, இயக்குநர் ஹரிக்கு டயோட்டா ஃபார்சூனர் காரைப் பரிசாக அளித்துள்ளார். 

ஹைதராபாத்தில் நடைபெற்ற சிங்கம் 3 படத்தின் தெலுங்குப் பதிப்பு வெற்றி விழாவில் இயக்குநர் ஹரி கூறியதாவது: நானும் சூர்யாவும் இணைந்து நிச்சயமாக சிங்கம் 4 படம் பண்ணுவோம். ஆனால் உடனே அல்ல. அதற்கு எப்படியும் நான்கைந்து வருடங்கள் ஆகும். என்னுடைய அடுத்தப் படம் சாமி படத்தின் இரண்டாம் பாகமாகும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனியார் ஆம்னி பேருந்து மோதி திமுக பிரமுகர், அவரது தோழியும் பலி

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களின் ஆட்சியர்கள் இடமாற்றம்!

ஆறுமுகனேரியில் தெருமுனைப் பிரசாரம்

பாதுகாப்பும் பயணமும்...

திருப்பதி லட்டு விவகாரம்: சுப்பிரமணியன் சுவாமி மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம்

SCROLL FOR NEXT