செய்திகள்

விஸ்வரூபம் 2 படம் வெளிவரத் தாமதம் ஏன்? கமல் பேட்டி

எழில்

கமல் நடித்து இயக்கி வந்த சபாஷ் நாயுடு படம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் விஸ்வரூபம் 2 படத்தை வெளியிடுவதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார் கமல். இதில் கமல், பூஜா குமார், ஆண்ட்ரியா, சேகர் கபூர், வகீதா ரஹ்மான் போன்றோர் நடித்துள்ளார்கள். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். 

இந்நிலையில் விஸ்வரூபம் 2 படம் குறித்த தகவல்களை சமூகவலைத்தளத்திலும் பேட்டிகளிலும் வெளியிட்டுள்ளார் கமல்.  

விஸ்வரூபம் படம் குறித்து எதிர்பார்ப்பவர்களுக்கு ஒரு செய்தி. தனிப்பட்ட முறையில் களமிறங்கி படத்தை வெளியிடுவதற்கான வேலைகளில் இறங்கியுள்ளேன். பெரிய தடைகள் எல்லாம் வெளியேறிவிட்டன. தொழிநுட்ப மற்றும் சட்ட ரீதியான பிரச்னைகள் மட்டுமே மீதமுள்ளன. என் குழுவினருடன் காத்திருங்கள். படப்பிடிப்புக்குப் பிறகான வேலைகள் முடிய 6 மாதங்கள் ஆகும் என்று கமல் ட்வீட் செய்துள்ளார். 

இந்த விவகாரம் குறித்து பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது: இன்னும் 6 மாதங்கள் வேலை உள்ளன. என்னுடைய தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவி, ஹாலிவுட் நடிகர் அர்னால்டை இசை வெளியீட்டு விழாவுக்கு அழைப்பதில் மும்முரமாக இருந்தார். பல படங்களின் விநியோக உரிமையிலும் அவர் பரபரப்பாக இருந்தார். அவர் படத்துக்கான செலவை முழுவதுமாகச் செலுத்தும்வரை அது என் படமாகவே இருக்கும். 

நான் என்னுடைய சம்பளத்தை விட்டுக்கொடுக்கத் தயார். ஆனால் படக்குழுவின் சம்பளம் முழுமையாக அளிக்கப்படவேண்டும். அவர்கள் அவதிப்படுவதை என்னால் பார்த்துக்கொண்டிருக்கமுடியாது. நானும் ஆஸ்கர் ரவியும் அடிக்கடி சந்திக்கிறோம். ஆனால் விஸ்வரூபம் 2 படம் தொடர்பாக எங்களிடம் பகைமை எதுவும் கிடையாது. அவர் மற்ற படங்களில் மும்முரமாக இருக்கிறார். எங்களுக்கு அது பலவருட உழைப்பு. அவருக்கு அது மற்றொரு படம். படத்தின் செலவுகள் குறைக்கப்படவேண்டும் என்று அவர் விரும்புகிறார். ஆனால் படக்குழுவினரின் சம்பளம் முழுமையாக வழங்கப்படாமல் படச்செலவைக் குறைக்கமுடியாது. இந்தப் படம் காய்கறி கடை கிடையாது என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சி

வியாபாரி தற்கொலை

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT